Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
3 ஆவது முறையாக திருமணம் செய்யும் அமீர் கான்!

Jul 3, 2026 - 02:22 PM

3 ஆவது முறையாக திருமணம் செய்யும் அமீர் கான்!
Mobitel Inner 1278

பாலிவுட் நடிகர் அமீர் கானுக்கும் அவரது லிவ் பாட்னர் காதலியான கௌரி ஸ்ப்ராட்டுக்கும் ஜூலை 5 ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளது. 

ராஜ்குமார் ஹிரானியின் 'ப்ரிதம் அண்ட் பெட்ரோ' தொடரின் திரையிடல் நிகழ்ச்சியில், ஆமிர் கான் தன்னுடைய மகன் ஜுனைத் கானுடன் பங்கேற்றார். 

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமீர் கான், கௌரி ஸ்ப்ராட்டுடனான தனது திருமணத்தை உறுதி செய்தார். ஜூலை 5 ஆம் திகதி மும்பையில் உள்ள அவரது பாந்த்ரா இல்லத்தில் திருமணம் நடைபெறும் என்று கூறினார். 

மேலும் அவர் தெரிவிக்கையில், 

இந்த திருமணம் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் தனிப்பட்ட நிகழ்வாக வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் நடைபெறும் என்றார். இந்த ஜோடியை ஆசிர்வதித்து வாழ்த்திடுமாறு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். 

நடக்கவிருக்கும் இந்த திருமண விழாவில், அமீர் கானின் முதல் மனைவி ரீனா தத்தாவுடனான திருமணத்தின் மூலம் பிறந்த நடிகர் ஜுனைத் கானும், திரைப்பட இயக்குநர் கிரண் ராவுடனான இரண்டாவது திருமணத்தின் மூலம் பிறந்த மகன் ஆசாத்தும் மற்றும் கௌரி ஸ்ப்ராட்டின் முந்தைய திருமணத்தின் மூலம் பிறந்த மகனும் பங்குபெறவுள்ளனர். 

61 வயதான அமீர் கான், கடந்த ஆண்டு தனது 60 ஆவது பிறந்தநாள் விழாவில் கௌரி ஸ்ப்ராட்டை ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்தி, அவர்களது உறவை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தினார். இருவரும் 2 ஆண்டுகளுக்கும் மேலாக உறவில் இருந்து வருவதுடன், கடந்த ஓர் ஆண்டாக குடும்பமாக இணைந்து வாழ்ந்து வருகின்றனர். தற்போது பதிவுத் திருமணம் செய்ய உள்ளனர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.

MOST READ
07
ரூ. 40 பில்லியன் அரசாங்க வருமானக் கசிவு தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும், வாகனத் துறையிலுள்ள அனைத்து இறக்குமதியாளர்களுக்கும் சீரான வரி அமைப்பை ஏற்படு

ரூ. 40 பில்லியன் அரசாங்க வருமானக் கசிவு தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும், வாகனத் துறையிலுள்ள அனைத்து இறக்குமதியாளர்களுக்கும் சீரான வரி அமைப்பை ஏற்படு

Sep 21, 2026 - 11:49 AM

காணொளி
மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

Mobitel 1278