Header Logo
Mogo Academy

விளையாட்டு
2026 உலகக் கிண்ணமே எனது கடைசி தொடர்!

Jul 6, 2026 - 10:11 AM -

0

2026 உலகக் கிண்ணமே எனது கடைசி தொடர்!
Mobitel inner

போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, 2026 உலகக் கிண்ணம் தனது கடைசி உலகக் கிண்ண தொடராக இருக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். 

ஸ்பெயின் அணிக்கு எதிரான போர்த்துக்கல் 16 ஆவது சுற்றுப் போட்டிக்கு முன்னதான ஊடக சந்திப்பின் போது, இனிவரும் காலங்களில் அவருடைய சர்வதேச போட்டிகளின் முடிவு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. 

அதற்குப் பதிலளித்த அவர், 

இதுவே தனது கடைசி உலகக் கிண்ணம் என்று அறிவித்தார். 41 வயதான ரொனால்டோ, தற்போது நடைபெற்று வரும் தொடரில் தனது ஆறாவது உலகக் கிண்ணத்தில் விளையாடுகிறார். 

இதில், நாக்-அவுட் சுற்றில் அடித்த தனது முதல் கோல் உட்பட மூன்று கோல்களை அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக, ரொனால்டோ தனது உலகக் கிண்ணத்தில் வாழ்க்கையில் 11 கோல்களை அடித்துள்ளார். 

"நான் இதை முடிந்தவரை முழுமையாக அனுபவிக்க விரும்புகிறேன், ஏனென்றால் இதுதான் எனது கடைசி உலகக் கிண்ணமாகும். ஆனால் நாளை (07) ஆட்டம் உலகக் கிண்ணத்தில் எனது கடைசி ஆட்டமாக இருக்காது என்று நம்புகிறேன்," என ரொனால்டோ கூறியதாக ஒன்ஃபூட்பால் தெரிவித்துள்ளது.


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara