Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
இளையராஜா பாடலை ஜி.வி. பிரகாஷ் பயன்படுத்த தடை!

Jul 6, 2026 - 11:52 AM

இளையராஜா பாடலை ஜி.வி. பிரகாஷ் பயன்படுத்த தடை!
Mobitel Inner 1278

ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள 'ஹேப்பி ராஜ்' திரைப்படத்தில் இளையராஜா பாடலைப் பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. 

ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள 'ஹேப்பி ராஜ்' திரைப்படத்தில் இளையராஜா பாடலைப் பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. 

நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் கடந்த மார்ச் 27 ஆம் திகதி 'ஹேப்பி ராஜ்' என்ற திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா இசையில் வெளிவந்த 'முரட்டுக்காளை' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'பொதுவாக எம்மனசு தங்கம்' என்ற பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது. 

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா வழக்குத் தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், தனது அனுமதியின்றி தனது பாடலை உருமாற்றி பயன்படுத்தியுள்ளனர். 

எனவே அந்த பாடலை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். 'ஹேப்பி ராஜ்' படத்தில் இருந்த அந்தப் பாடலை நீக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 

இந்த வழக்கு நீதிபதி எம் குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஏ.சரவணன், இளையராஜா அனுமதி இல்லாமல் பதிப்புரிமைச் சட்டத்தை மீறும் வகையில் 'ஹேப்பிராஜ்' படத்தில் இளையராஜாவின் பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பாடலை உருமாற்றி இருப்பதால் பாடலை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார். 

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, 'ஹேப்பி ராஜ்' படத்தில் 'பொதுவாக எம்மனசு தங்கம்' என்ற பாடலை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டார். 

மேலும் இதுகுறித்து படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். ஹேப்பி ராஜ் வெளியாகி 3 மாதங்கள் ஆன நிலையில் இளையராஜா பாடலுக்கு உயர்நீதிமன்றம் தடைவிதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.

MOST READ
07
ரூ. 40 பில்லியன் அரசாங்க வருமானக் கசிவு தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும், வாகனத் துறையிலுள்ள அனைத்து இறக்குமதியாளர்களுக்கும் சீரான வரி அமைப்பை ஏற்படு

ரூ. 40 பில்லியன் அரசாங்க வருமானக் கசிவு தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும், வாகனத் துறையிலுள்ள அனைத்து இறக்குமதியாளர்களுக்கும் சீரான வரி அமைப்பை ஏற்படு

Sep 21, 2026 - 11:49 AM

காணொளி
மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

Mobitel 1278