Header Logo
Mogo Academy

விளையாட்டு
வெற்றிக் கொண்டாட்டத்தில் இப்படியா பண்றது?

Jul 6, 2026 - 02:08 PM -

0

வெற்றிக் கொண்டாட்டத்தில் இப்படியா பண்றது?
Mobitel inner

23 ஆவது உலகக் கிண்ண கால்பந்து தொடரில் இன்று (06) நடைபெற்ற 'சுற்று-16' போட்டியில் மெக்சிகோவை வீழ்த்தி இங்கிலாந்து அணி காலிறுதிக்கு முன்னேறியநிலையில், அந்த வெற்றியை கொண்டாடியபோது இங்கிலாந்து வீரர் ஹென்டர்சனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 

மெக்சிகோ சிட்டியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து 3 - 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. போட்டி முடிந்ததும், வெற்றியை உற்சாகமாக கொண்டாடிய இங்கிலாந்து வீரர் ஹென்டர்சன், மைதானத்தில் இருந்த விளம்பர தடுப்புகள் மீது ஏறியபோது எதிர்பாராத விதமாக தடுமாறி கீழே விழுந்தார். 

இந்த விபத்தில் அவரது மணிக்கட்டில் காயம் ஏற்பட்டதாக இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் தாமஸ் துஹெல் தெரிவித்துள்ளார். தற்போது ஹென்டர்சன் வைத்தியசாலையில் சிகிச்சையில் உள்ளார். 

ஏற்கனவே, இங்கிலாந்து அணியின் ரீஸ் ஜேம்ஸ் தொடைப் பகுதி தசையில் (ஹாம்ஸ்ட்ரிங்) காயமடைந்திருக்கும் நிலையில், தற்போது ஹென்டர்சனும் காயமடைந்திருப்பது அந்த அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

மெக்சிகோவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ள இங்கிலாந்து அணி, அடுத்ததாக நார்வே அணியை எதிர்கொள்கிறது. இந்த காலிறுதி போட்டி மியாமியில் ஏதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெற உள்ளது.

MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara