Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
'மாவீரன் 2' படத்தின் படப்பிடிப்பு எப்போது?

Jul 8, 2026 - 10:34 AM

'மாவீரன் 2' படத்தின் படப்பிடிப்பு எப்போது?
Mobitel Inner 1278

'மண்டேலா' படத்தின் மூலம் தேசிய விருதை வென்று, ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குனர் மடோன் அஸ்வின். 

இதனைத் தொடர்ந்து, கடந்த 2023 ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்கிய 'மாவீரன்' திரைப்படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. 

ஒரு சாதாரண கார்ட்டூனிஸ்ட், விபத்திற்குப் பின் தனக்கு மட்டும் கேட்கும் ஒரு 'அசரீரி' குரலால் எப்படி சூப்பர் ஹீரோவாக மாறுகிறான் என்ற வித்தியாசமான கற்பனை மற்றும் சமூகக் கருத்துக்களோடு வெளியான இப்படம் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் அதிதி ஷங்கர், இயக்குநர் மிஸ்கின், சரிதா, சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 

குறிப்பாக, படத்தின் திருப்புமுனையாக அமைந்த அந்த 'அசரீரி' குரலுக்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி டப்பிங் கொடுத்திருந்தது படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்தது. 

படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானதில் இருந்தே, இதன் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. இதற்கு உற்சாகம் அளிக்கும் விதமாக ‘மாவீரன்-2’ படத்தின் கதையை மடோன் அஸ்வின் எழுதத் தொடங்கியுள்ளதாக சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியானது. 

இந்த நிலையில், ‘மாவீரன்-2’ படத்தின் படப்பிடிப்பு 2028 ஆம் ஆண்டு தொடங்கும் என்ற தகவல் சினிமா வட்டாரங்களில் பரவி வருகிறது. ‘மாவீரன்-2’ படத்தில் நடிக்க நடிகர் சிவகார்த்திகேயனும் ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது. 

இதனால் ‘மாவீரன்-2’ படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இனிவரும் நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

Mobitel 1278