Header Logo
Mogo Academy

சினிமா
நிறைமாத கர்ப்பத்துடன் டான்ஸ் ஆடிய பிகில் நடிகை!

Jul 8, 2026 - 12:53 PM -

0

நிறைமாத கர்ப்பத்துடன் டான்ஸ் ஆடிய பிகில் நடிகை!
Mobitel inner

பிகில், கூலி, ஜன நாயகன் உள்ளிட்ட பல பெரிய படங்களில் நடித்து அசத்திய ரெபா மோனிகா ஜான் சமீபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்ற போட்டோக்களையும் தனது பேபி பம்ப்பையும் காட்டி போஸ் கொடுத்திருந்தார். 

இந்நிலையில், தனது கணவருடன் நடனமாடும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளார். 

பொதுவாக பெண்கள் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போது அடியெடுத்து வைப்பதையே பார்த்து வைக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால், தடகள வீராங்கனைகள் சிலர் நிறைமாத கர்ப்ப வயிற்றுடன் ஓடி சாதனையும் செய்துள்ளனர். 

சிங்கப்பெண்ணே பாடலில் தளபதி விஜய்யுடன் நடித்த ரெபா மோனிகா ஜான் கர்ப்ப வயிற்றுடன் நடனமாடிய வீடியோவை பலரும் ஷேர் செய்தும் அவரது வீடியோவுக்கு கீழ் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். 

விஜய்யுடன் பிகில் மற்றும் விரைவில் வெளியாகவுள்ள ஜன நாயகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரெபா மோனிகா ஜான், கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான கூலி படத்தில் ஸ்ருதிஹாசன் தங்கையாகவும் நடித்திருந்தார். 

ஹரிஷ் கல்யாண் உடன் தனுசு ராசி நேயர்களே படத்தில் நடித்த ரெபா சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஜோமோன் ஜோசப் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட ரெபா மோனிகா ஜான் தற்போது கர்ப்பமாகி உள்ளார். 

வயிற்றில் குழந்தை இருக்கும் போது சுகமான ராகங்களையும் நல்ல மெலோடி பாடல்களையும் கேட்பது குழந்தைகளுக்கு நல்லது என்பார்கள். சிலர் அதிரடியாக தலைகீழாக யோகா செய்வது, ஓடுவது என்றும் கர்ப்ப வயிற்றுடன் எதையும் செய்ய முடியும் என்றும் செய்துக்காட்டி அசத்தியுள்ளனர். 

இந்நிலையில், ரெபா மோனிகா ஜான் கர்ப்ப வயிற்றுடன் டான்ஸ் ஆடிய வீடியோவை சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். கூடவே அவரது கணவரும் உடன் சேர்ந்து நடனமாடுகிறார். 

குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் ப்ளீஸ் என்றும் இது போன்ற நேரங்களில் இப்படி ஆடுவது சரியல்ல என்றும் சில எச்சரிக்கை கமெண்ட்டுகளும் குவிந்து வருகிறது. ஆனால், பல ரசிகர்கள் கூல் பேரன்ட்ஸ் என்றும் குழந்த பிறந்து பெரிய ஆள் ஆன உடன் உங்களை விட அருமையான டான்ஸராக மாறும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 


MOST READ

காணொளி
பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

Mobitel Upahara