Header Logo
SLIC
உலகம்
ஜோர்தான், குவைத், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

Jul 13, 2026 - 09:12 AM

ஜோர்தான், குவைத், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல்
Mobitel Inner 1278
EDEX Inner

அமெரிக்க இராணுவத்தால் பயன்படுத்தப்படும் ஜோர்தான் தளத்தில் உள்ள எரிபொருள் சேமிப்புத் தாங்கிகள் மற்றும் ஆயுதக் கிடங்குகள் மீது தமது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. 

ஜோர்தானின் இளவரசர் ஹசன் விமானப் படையணித் தளத்தை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தாக்கியுள்ளதாக ஈரான் குறிப்பிட்டுள்ளது. 

ஈரான் மீது அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதில் வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. 

அதேநேரம் பஹ்ரைனில் அபாய எச்சரிக்கை ஒலிகள் ஒலிக்கப்பட்டதாகவும் ரொயிட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. 

பழிவாங்கும் நடவடிக்கையின் இரண்டாம் கட்டமாக பஹ்ரைனின் ஷேக் ஈசாவில் உள்ள அமெரிக்கத் தளத்தைத் தாக்கியுள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. 

எவ்வாறாயினும் இது அமெரிக்காவின் கடற்படைத் தலைமையகம் இல்லையென்ற போதிலும் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கும் விமானங்களுக்கும் குறித்த தளம் வசதிகளை வழங்கி வருகின்றது. 

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவ இலக்கைத் தாக்கியுள்ளதாக ஈரான் கூறுகின்ற நிலையிலும், வளைகுடா நாடான அங்கு அவசரகால எச்சரிக்கை ஒலிகள் ஒலிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவளை குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278