Header Logo
Mogo Academy

பல்சுவை
தவெக நிர்வாகி வீராசாமி கட்சியில் இருந்து நீக்கம்!

Jul 15, 2026 - 05:07 PM -

0

தவெக நிர்வாகி வீராசாமி கட்சியில் இருந்து நீக்கம்!
Mobitel inner

செங்கல்பட்டு மாவட்டம், மாம்பாக்கம் ஊராட்சித் தலைவரும், தவெக நிர்வாகியுமான வீராசாமி ஒப்பந்ததாரர் ஒருவரிடம் இருந்து லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், வீராசாமியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் பொறுப்புகளிலிருந்து நீக்கி கட்சி தலைமை அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம், மாம்பாக்கம் ஊராட்சித் தலைவரும், தவெக நிர்வாகியுமான வீராசாமி ஒப்பந்ததாரரிடமிருந்து பணம் வாங்குவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோ அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதைத் தொடர்ந்து, கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் நடந்துகொண்டதாகக் கூறி, வீராசாமியை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி தவெக தலைமை உத்தரவிட்டுள்ளது. 

இதுகுறித்து, கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளராக பதவி வகித்து வந்த வீரா [எ] வீராசாமி இன்று முதல் கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் மற்றும் பொறுப்புகளிலிருந்து நீக்கப் படுகின்றார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


MOST READ

காணொளி
கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

Mobitel Upahara