Header Logo
Mogo Academy

பல்சுவை
100 சேவல்கள் பலியிட்டு வழிபாடு - ஆண்களுக்கு மட்டுமே அன்னதானம்!

Jul 20, 2026 - 12:53 PM -

0

100 சேவல்கள் பலியிட்டு வழிபாடு - ஆண்களுக்கு மட்டுமே அன்னதானம்!
Mobitel inner

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள மங்களாம்பட்டியில் மழை வேண்டி ஆண்கள் மட்டுமே படையல் வைத்து வழிபடும் விநோத திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் நடைபெறுவது வழக்கம். 

அதன்படி இந்தாண்டு ஆடி படையல் திருவிழா நேற்று (19) நடைபெற்றது. 

இதையொட்டி கிராமத்தினர் பலரும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக மதுரைவீரன் சுவாமிக்கு சேவல்களை பலியிட்டு வழிபாடு நடத்தினர். 

அதன்படி 100-க்கும் மேற்பட்ட சேவல்கள் பலியிடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பெண்களும், ஆண்களும் கலந்து கொண்டு வழிபட்டனர். 

தொடர்ந்து பலியிடப்பட்ட 100-க்கும் மேற்பட்ட சேவல்கள் பெரிய, பெரிய பாத்திரங்களில் சமைக்கப்பட்டன. 

சேவல் கறியுடன், மொச்சைப்பயறு கலந்து உணவு சமைக்கப்பட்டது. இந்த உணவுகளை ஆண்கள் மட்டுமே சமைத்தனர். 

இதை தொடர்ந்து அப்பகுதியில் வாழை இலை போட்டு பக்தர்களுக்கு சுடச்சுட உணவு பரிமாறப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதானத்தில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு சாப்பிட்டனர். 

பெண்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். 

பெண்களுக்கு அன்னதானம் சாப்பிட அனுமதி இல்லை என பொதுமக்கள் தெரிவித்தனர். 

இவ்வாறு வழிபடுவதால் மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாகும். 

இதற்கிடையே நேற்று விழா நடக்கும்போது திடீரென அப்பகுதியில் சாரல் மழை பெய்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

Mobitel Upahara