Header Logo
Vallibel FD
Selan Bank
பல்சுவை
எப்போதும் இளமையாக காட்சியளிக்க வேண்டுமா!

Jul 20, 2026 - 04:53 PM

எப்போதும் இளமையாக காட்சியளிக்க வேண்டுமா!
Mobitel Inner 1278

தினமும் குறைந்தபட்சம் 8 டம்ளர் பருகுங்கள். உடலின் இயல்பான செயல்பாடுகளுக்கும், சருமத்தின் ஈரப்பதத்தை பராமரிக்கவும் தண்ணீர் உதவும். 

பழங்கள், காய்கறிகள், முழுத் தானியங்கள் மற்றும் புரதம் நிறைந்த சத்தான உணவை உண்ணுங்கள். நீண்டகால ஆரோக்கியத்தை மேம்படுத்தி, வயது தொடர்பான நோய்களின் அபாயத்தை குறைக்க இவை துணைபுரியும். 

சன்ஸ்கிரீனை தினமும் பயன்படுத்துங்கள். சூரியனின் புற ஊதாக்கதிர்களால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகள், முன் கூட்டியே தோன்றும் சுருக்கங்கள் மற்றும் சரும புற்றுநோய் அபாயத்தை குறைப்பதற்கு சன்ஸ்கிரீன் துணை புரியும். 

கிரீன் டீ கிரீன் டீயில் இருக்கும் பாலிபீனால்கள் விரைவில் வயதாவதை தடுக்கும் ஆற்றல் கொண்டவை. 

சர்க்கரையை அளவோடு பயன்படுத்துங்கள். அதிக சர்க்கரை உட்கொள்வது உடல் பருமன், நீரிழிவு மற்றும் சில நீண்டகால நோய்களுக்கான அபாயத்தை அதிகரிக்கலாம். 

சமூக உறவுகளை பேணுங்கள். குடும்பம், நண்பர்கள் ஆகியோருடன் சிறந்த உறவை பேணுவது மன நலத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் உதவும். 

புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டே இருங்கள். மூளையின் செயல்பாட்டை சுறுசுறுப்பாக வைத்திருக்க இது உதவக்கூடும். 

மன அழுத்தத்தை கட்டுப்படுத்துங்கள். தியானம், சுவாசப் பயிற்சி அல்லது மன அமைதி பயிற்சிகள் மன நலத்தை மேம்படுத்த வழி வகை செய்யும். 

தினமும் 7 முதல் 9 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் பெறுங்கள். ஆழ்ந்த தூக்கம் உடல் தன்னைத்தானே பழுதுபார்க்கும் செயல்முறைகளுக்கும், மன நலத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் முக்கியமானது. 

வாரத்திற்கு 2 அல்லது 3 முறை தசைகளை வலுப்படுத்தும் (ஸ்டிரென்த் டிரெய்னிங்) பயிற்சிகளை செய்யுங்கள். தசை மற்றும் எலும்பு வலிமையை பாதுகாக்க இந்த பயிற்சிகள் உதவிடும். 

வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி செய்வது இதய ஆரோக்கியம், தசை வலிமை மற்றும் நீண்ட ஆயுளுக்கு பயனுள்ளதாகும். 

நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். இவை மன நலத்திற்கு நன்மை தரும். 

சிரிப்பு மன அழுத்தத்தைக் குறைக்க உதவக்கூடும். மன நிலையை மேம்படுத்தும் நல்ல ஹார்மோன்களின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும். 

மதுப்பழக்கத்தை தவிருங்கள். அதிக அளவு மது உட்கொள்வது பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். விரைவாக வயது அதிகரிக்கும் தோற்றத்தை உண்டாக்கும். 

ஆரோக்கியமான கொழுப்புகளை உணவில் சேருங்கள். அவகேடோ, நட்ஸ்கள், விதைகள் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்றவை இதய ஆரோக்கியத்திற்கு நலம் சேர்ப்பவை. 

உடல் தோரணையை சீராக பராமரியுங்கள். முதுகு மற்றும் கழுத்து வலியை குறைக்கவும், உடல் சம நிலையை மேம்படுத்தவும் உதவும். 

இத்தகைய பழக்கவழக்கங்களை பின்பற்றுவது விரைவில் வயதாவதை தடுத்து, எப்போதும் இளமையாக காட்சியளிக்க உதவக்கூடும்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Mobitel 1278