Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
மணிரத்னம் - விஜய் சேதுபதி முதன்முறையாக இணையும் படம்!

Jul 26, 2026 - 09:02 PM

மணிரத்னம் - விஜய் சேதுபதி முதன்முறையாக இணையும் படம்!
Mobitel Inner 1278

மணிரத்னம் இயக்கத்தில், தனது மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் இயக்கும் புதிய காதல் திரைப்படத்தின் படப்பிடிப்பை தற்போது கொல்கத்தாவில் தொடங்கியுள்ளார். 

மணிரத்னம் இயக்கும் புதிய திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர். 

சமீபத்தில், இத்திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின. 

ஆனால், அந்த தகவல் உண்மையல்ல என்றும், மணிரத்னத்தின் நீண்டநாள் கூட்டணியான ஏ.ஆர். ரகுமானே இசையமைப்பாளராக பணியாற்ற உள்ளார் என்றும் கூறப்படுகிறது. 

மேலும், படத்திற்கான ஒரு பாடலை ஏற்கனவே ஏ.ஆர். ரகுமான் உருவாக்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

1992-ஆம் ஆண்டு வெளியான 'ரோஜா' திரைப்படம் முதல் மணிரத்னம் மற்றும் ஏ.ஆர். ரகுமான் இணைந்து பல வெற்றிப்படங்களை வழங்கியுள்ளனர். 

இந்த புதிய படத்திலும் அந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைவதாக கூறப்படுகிறது. 

முன்னதாக, 'செக்கச் சிவந்த வானம்' திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மணிரத்னம் இயக்கத்தில் நடித்திருந்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக அவருடன் இணைகிறார். 

அழுத்தமான காதல் கதைக்களத்தில் உருவாகும் இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை, படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே நெட்பிளிக்ஸ் நிறுவனம் சுமார் 40 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

எனினும், படத்தின் நடிகர்கள், தொழில்நுட்பக் குழு மற்றும் வெளியீட்டு திகதி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ரசிகர்கள் அந்த அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

மணிரத்னம், தனது அடுத்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பைக் கொல்கத்தாவில் தொடங்கியுள்ளார். படத்தின் மிக முக்கியமான காட்சிகள் கொல்கத்தாவின் அடையாளமான ஹவுரா பாலத்தில் நள்ளிரவு நேரங்களில் படமாக்கப்பட்டு வருகின்றன. 

படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் மணிரத்னம் காட்சிகளை விளக்குவதும், விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி ஆகியோர் நடிக்கும் காட்சிகள் அடங்கிய பிரத்யேகப் புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன. 

இதில், நடிகர் விஜய் சேதுபதி மீசை, தாடி இல்லாத தோற்றத்தில் நடித்து வருகிறார். இந்த புதிய கூட்டணியின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

Mobitel 1278