Jul 27, 2026 - 08:49 AM -
0
கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான பிரேமலு" திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக மாறியவர் மமிதா பைஜூ.
அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழில் விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்து வருகிறார்.
கடந்த ஜூலை 23ம் திகதி விஜய்யுடன் அவர் நடித்த "ஜனநாயகன்" திரைப்படம் வெளியானது.
அடுத்ததாக சூர்யாவுடன் அவர் நடித்துள்ள "விஸ்வநாத் அண்ட் சன்ஸ்" படம் வரும் ஒகஸ்ட் 14ம் திகதி வெளியாக இருக்கிறது.
அதேபோல மலையாளத்தில் தற்போது நடிகர் நிவின்பாலியுடன் மமிதா பைஜூ நடித்துள்ள "பெத்லகேம் குடும்ப யூனிட்" திரைப்படம் அதே ஒகஸ்ட் 21ம் திகதி வெளியாகிறது.
அந்த வகையில், வளர்ந்து வரும் நடிகையான மமிதா பைஜூக்கு சரியாக 30 நாட்களில் மூன்று படங்கள் வெளியாவது என்பது ஒரு சாதனை தான்.
இதற்கு முன்பு வரலட்சுமி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷூக்கு மட்டும் தான் இப்படி நடந்தது. இப்போது அந்த இடத்திற்கு மமிதா பைஜூ வந்துள்ளார்.
