Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
எனக்கு எத்தனை புருஷன் இருந்தா என்ன!

Jul 27, 2026 - 12:46 PM

எனக்கு எத்தனை புருஷன் இருந்தா என்ன!
Mobitel Inner 1278

இயக்குநர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் படத்தில் முக்கிய காட்சியில் நடித்து பலரது கவனத்தையும் பெற்றவர் தான் நடிகை ரேகா நாயர். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், நான் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் சீரியல்களிலிருந்து முழுமையாக விலகிவிட்டேன். 

சீரியலில் நடிகர் நடிகைகளுக்கு சரியான மரியாதை இல்லை, நல்ல சாப்பாடு இல்லை, உரிய சம்பளம் இல்லை, மதிப்பும் மரியாதையும், சம்பளமும் இல்லாத இடத்தில் ஏன் இருக்க வேண்டும், அதனால்தான் அந்த துறையைவிட்டு விலகினேன் என்று கூறியுள்ளார். 

மேலும் இந்த சமூதாயத்தில் பெண்கள் மீதான பாதை எப்போதும் வேறுவிதமாகத்தான் இருக்கிறது. அது மாற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து தன் கருத்துகளை பதிவிட்டு வருகிறேன். 

அதற்காக பல விமர்சனங்களை எதிர்கொள்கிறேன், பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளை இந்த சமூகம் மிகவும் எளிதாக பயன்படுத்துகிறது. 

ஆனால், அதே செயல்களில் ஈடுபடும் ஒரு ஆணை யாரும் அதே வார்த்தைகளால் விமர்சிப்பதில்லை ஒரு பெண்ணை மட்டும் குற்றம் சாட்டுவது ஏன்? தவறு செய்திருந்தால் அதில் சம்பந்தப்பட்ட ஆணையம் அதே பெயரில் தானே அழைக்க வேண்டும். 

இந்த கேள்விகளை நான் கேட்பதால், என் பதிவுகளுக்கு கீழே, உனக்கு எத்தனை புருஷன் என்று கேட்டு கமெண்ட் செய்கிறார்கள். எனக்கு எத்தனை புருஷன் இருந்தால் அவர்களுக்கு என்ன? யாரு கூட வாழ்ந்தால் அவருக்கு என்ன? 

இந்த கமெண்டை பார்த்து நான் ஒடுங்கி போகாமல் எனக்கு 99 புருஷன், 100 ஆவது புருஷன், நீ வரியா என்று துணிச்சலாக கேட்டேன். இதுபோல் எத்தனை பெண்கள் கேள்வி கேட்பார்கள் என்று எனக்கு தெரியவில்லை. 

பெண்கள் ஏதாவது கருத்தை பகிர்ந்தால் அவர்களை இந்த மோசமான சமூகம் இதுபோன்ற வார்த்தைகளை கேட்டு அவளை அமுக்கிவிடுகிறது. இதுதான் மாற வேண்டும். பெண்கள் மீது இழிவான விமர்சனங்களை முன் வைப்பது எந்த வகையிலும் நியாயமல்ல என்றும் சமூகத்தில் பெண்களை மதிக்கும் மனப்பான்மை உருவாக வேண்டும் என்றும் ரேகா தெரிவித்துள்ளார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

Mobitel 1278