Header Logo
SLIC
Rhythams of Lanka
ஏனையவை
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள கிரிஸி ஹூலஹேன்!

Jul 28, 2026 - 05:47 PM

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள கிரிஸி ஹூலஹேன்!
Mobitel inner

சுதந்திரமான, திறந்த மற்றும் செழிப்பான ஒரு இந்தோ - பசிபிக் பிராந்தியத்திற்கான பகிரப்பட்ட முன்னுரிமைகளை மேம்படுத்துவதற்காகவும், இலங்கையுடனான அமெரிக்காவின் பங்காண்மையினை பலப்படுத்துவதற்காகவும், ஜூலை மாதம் 27 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை, அமெரிக்க காங்கிரசின் தூதுக்குழுவொன்று காங்கிரசின் உறுப்பினரான கிரிஸி ஹூலஹேன் (D-PA) தலைமையில் இலங்கைக்கு விஜயம் செய்கிறது. 

முன்னாள் விமானப்படை வீராங்கனையான ஹூலஹேன் பிரதிநிதிகள் சபையின் ஆயுத சேவைகள் குழுவின் உறுப்பினராகவும், அதன் இராணுவப் பணியாளர்கள் மீதான துணைக்குழுவின் சிரேஷ்ட உறுப்பினராகவும் மற்றும் சபையின் புலனாய்வு தொடர்பான நிரந்தரத் தேர்வுக் குழுவின் ஒரு உறுப்பினராகவும் பதவி வகிக்கிறார். 

கொழும்பில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் பல்வேறுபட்ட இருதரப்பு விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக, பிரதிப் பாதுகாப்பமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருன ஜயசேகர, பாராளுமன்ற பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலிஹ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் உட்பட்ட, அரச, இராணுவ மற்றும் உள்ளூர் தலைவர்களுடனான உயர் மட்ட சந்திப்புகளையும் இத்தூதுக்குழுவினர் மேற்கொள்வர். 

நாடுகடந்த குற்றங்களைத் தடுத்தல், வர்த்தக உறவுகளையும் பொருளாதார அபிவிருத்தியையும் ஆழப்படுத்துதல், பிராந்திய ஸ்திரத்தன்மையினையும், பாதுகாப்பு ஒத்துழைப்பினையும் மேம்படுத்துதல் போன்ற பகிரப்பட்ட முன்னுரிமைகளைக் கையாளும் வகையிலான, ஒரு மிகவும் வலுவான இருதரப்பு உறவுகளை இலங்கையுடன் பேணுவதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டினை பிரதிநிதி ஹூலஹேனின் விஜயம் பிரதிபலிக்கிறது.


MOST READ

காணொளி
ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

Mobitel Upahara