Header Logo
இந்தியா
கர்நாடகாவுக்கு வாங்க.. ஆனா இப்போ வேண்டாம்!

Jul 31, 2026 - 05:38 PM

கர்நாடகாவுக்கு வாங்க.. ஆனா இப்போ வேண்டாம்!
Mobitel inner

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை முதலில் கர்நாடகாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்த அம்மாநில முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், தற்போது திடீரென இப்போது வேண்டாம் என்கிறார். இதற்கு என்ன காரணம் என்பதைப் பற்றி பார்ப்போம். 

கர்நாடகாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே காவிரி நதிநீர் பிரச்சினை என்பது 100 ஆண்டுகளுக்கு மேலாகவும், மேகதாது அணை பிரச்சினை என்பது 10 ஆண்டுகளுக்கும் மேலாகவும் இருந்து வருகிறது. 

இத்தனை ஆண்டுகளாக இரு மாநிலங்களில் இருந்த முதலமைச்சர்களில் ஒருசிலர், இந்த பிரச்சினையை தீர்க்க பேச்சு வார்த்தை மேற்கொண்டாலும் முடிவு எட்டப்படவில்லை. இந்த நிலையில், இரு மாநிலங்களிலும் புதிய முதலமைச்சர்களாக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய் (தமிழ்நாடு), டி.கே.சிவகுமார் (கர்நாடகா) ஆகியோர் நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த தயாரானார்கள். 

அதற்கான நாளும் குறிக்கப்பட்டது. ஆகஸ்ட் 03 ஆம் திகதி பெங்களூருவில் உள்ள கர்நாடக மாநில தலைமைச் செயலகத்தில், பகல் 12 மணிக்கு ஜோசப் விஜய் - டி.கே.சிவக்குமார் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்காக, அங்கே ஒரு அறையே தயாரானது. 

அதே நேரத்தில், கர்நாடகாவில் பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என்று போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கின. தமிழகத்திலும், பேச்சு வார்த்தைக்கு கர்நாடகா செல்லக்கூடாது என முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யுக்கு எதிர்ப்பு கிளம்பியது. 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. தலைவர் வைத்தியர் அன்புமணி ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

இருமாநிலங்களிலும் இவ்வாறு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், ஆகஸ்டு 3-ந் தேதி நடைபெற இருந்த ஜோசப் விஜய் - டி.கே.சிவகுமார் சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 

இன்று (31) காலை தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளை அழைத்து காவிரி பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்தினார். அதே நேரத்தில், கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமாரும், அம்மாநில அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். 

அதே நேரத்தில், தமிழ்நாட்டிற்கு காவிரியில் வினாடிக்கு 3,500 கனஅடி வீதம் தண்ணீரை அடுத்த 15 நாட்களுக்கு திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. 

ஆனால், தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடக அரசு மறுத்துவிட்டது. இப்படி உத்தரவுகளை மதிக்காத நிலையில்தான் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யும் அங்கு செல்ல திட்டமிட்டார். 

இந்த நிலையில், பெங்களூருவுக்கு செல்லும் முதலமைச்சர் ஜோசப் விஜய்யுடன் 13 பேர் கொண்ட குழுவும் பயணிக்க இருந்தது. அந்த பட்டியலும் இன்று வெளியிடப்பட்டது. இப்படி, பரபரப்பு எகிறிக் கொண்டே இருந்த நேரத்தில்தான், கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். 

அதாவது, தற்போதைய சூழலில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் கர்நாடகா வர வேண்டாம். சந்திப்பை பிறகு வைத்துக்கொள்ளலாம் என்று கூறிவிட்டார். அதற்கு, காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசுக்கு ஏற்பட்ட தொடர் பின்னடைவுதான் காரணமாக கூறப்படுகிறது. 

ஏற்கனவே, சட்ட ரீதியாக தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் தான், காவிரி மேலாண்மை ஆணையம் போன்றவை உருவாக்கப்பட்டன. தற்போது, தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் வினாடிக்கு 3,500 கனஅடி வீதம் மொத்தம் 4.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க வேண்டும் என்று அந்த ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

ஆனால், இதற்கு கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் மறுப்பு தெரிவித்து, "காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம்" என்று கூறியுள்ளார். 

இதுவரை, பேச்சு வார்த்தையின் மூலம் தீர்வு காணலாம் என்று நினைத்திருந்த கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார், தற்போது சட்ட ரீதியாக போகலாம் என்று முடிவு செய்துவிட்டார். அதாவது, கர்நாடக அரசு உயர் அதிகாரிகளுடன் அவர் நடத்திய ஆலோசனைக்கு பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

அதனால்தான், தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இப்போது கர்நாடகா வர வேண்டாம் என்று அவர் கூறிவிட்டார். தற்போது, விஸ்வரூபம் எடுத்துள்ள காவிரி பிரச்சினையால் தமிழகம், கர்நாடகா ஆகிய இருமாநிலங்களிலும் விவசாயிகள் கொந்தளித்து போய் உள்ளனர். 

மேலும், காவிரி பிரச்சினை அரசியல் ரீதியாக எந்தவித தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கட்டியமிட்டு கூற முடியவில்லை. தமிழகத்திற்கு சாதகமாக இருந்தால், கர்நாடகாவில் போராட்டம் வெடிக்கும். அதேபோல், கர்நாடகாவுக்கு சாதகமாக அமைந்தால், தமிழ்நாட்டில் பிரச்சினைகள் எழும். 

கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அடுத்த சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 1.5 ஆண்டுகளே இடைவெளி இருக்கிறது. எனவே, ஒவ்வொரு கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கின்றன. காவிரி பிரச்சினை கர்நாடக அரசுக்கு எதிராக திரும்பினால், வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும். 

அதே நேரத்தில், தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைத்தாலும், அந்தக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. எனவே, காவிரி பிரச்சினையை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியிடம் எடுத்துச் சென்றாலும், இருமாநிலங்களுக்கும் நலன் பயக்கும் வகையில், அவரால் எந்தவித முடிவையும் கூற முடியாது. ஏதோவொரு மாநிலத்தை பாதிக்கத்தான் செய்யும். 

எனவே, காவிரி நதிநீர் பிரச்சினை, மேகதாதுவில் புதிய அணை கட்டும் பிரச்சினை ஆகியவற்றை சட்ட ரீதியாக எதிர்கொள்வதே தமிழகத்திற்கு சிறந்ததாக இருக்கும். ஆனால், சட்ட ரீதியான தீர்வு என்பது உடனே கிடைத்துவிடாது. சிறிது காலம் காத்திருந்துதான் ஆக வேண்டும்.


MOST READ

காணொளி
மக்களுக்கு நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது!

மக்களுக்கு நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது!

ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்

ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்

செம்மணியில் நீதி கோரிய அமைதி வழி போராட்டம்!

செம்மணியில் நீதி கோரிய அமைதி வழி போராட்டம்!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

Mobitel Upahara