Header Logo
செய்திகள்
வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் சீனப் பெண் கைது

Aug 3, 2026 - 09:48 AM

வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் சீனப் பெண் கைது
Mobitel inner

30 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சிகரெட் தொகுதியுடன் சீனப் பெண் ஒருவர் விமான நிலைய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

​ சீனாவில் தயாரிக்கப்பட்ட குறித்த சிகரெட்டுக்களை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டுவந்து, அவற்றை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்றபோதே இப்பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

​ இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் சீனாவின் ஷீ-ஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த 44 வயதுடைய அழகுக்கலை நிபுணர் என தெரியவந்துள்ளது. 

​ இவர் இந்த சிகரெட் தொகுதியை சீனாவிலிருந்து கொள்முதல் செய்து மலேசியாவின் கோலாலம்பூர் நகருக்கு எடுத்துச் சென்று, அங்கிருந்து மலேசிய எயார்லைன்ஸ் MH-179 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். 

​ இதன்போது அவர் கொண்டு வந்த பயணப் பைகளிலிருந்து சீனாவில் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான 20,400 சிகரெட்டுகளைக் கொண்ட 102 சிகரெட் பொதிகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர். 

​ கைதுசெய்யப்பட்ட சீனப் பெண்ணை இன்று (03) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

MOST READ

காணொளி
எப்படி அமைச்சரே இதை ஏற்றுக்கொள்வது?

எப்படி அமைச்சரே இதை ஏற்றுக்கொள்வது?

பிரதான பாலத்தின் மேல் பெருக்கெடுத்து ஓடும் வௌ்ளம்!

பிரதான பாலத்தின் மேல் பெருக்கெடுத்து ஓடும் வௌ்ளம்!

இதில் அரசியல் நோக்கம் கிடையாது!

இதில் அரசியல் நோக்கம் கிடையாது!

எங்களின் ஒருமித்த கருத்தைத் தெரிவித்தோம்!

எங்களின் ஒருமித்த கருத்தைத் தெரிவித்தோம்!

தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காகவே ஒன்று கூடியுள்ளோம்!

தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காகவே ஒன்று கூடியுள்ளோம்!

சீரற்ற வானிலையால் மக்கள் பெரும் அசௌகரியம்!

சீரற்ற வானிலையால் மக்கள் பெரும் அசௌகரியம்!

மாகாண சபைத் தேர்தலைப் பழைய முறையில் நடத்துங்கள்!

மாகாண சபைத் தேர்தலைப் பழைய முறையில் நடத்துங்கள்!

3 விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதியிடம் கலந்துரையாடினோம்!

3 விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதியிடம் கலந்துரையாடினோம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

ஆற்றோர மக்களுக்கு எச்சரிக்கை!

ஆற்றோர மக்களுக்கு எச்சரிக்கை!

Mobitel Upahara