Header Logo
நிகழ்வுகள்
கொடிச்சீலை

Aug 3, 2026 - 09:47 AM

கொடிச்சீலை
Mobitel inner

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று (03) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் நேற்று (02) மாலை கொடிச்சீலை கொண்டுசெல்லும் நிகழ்வு நடைபெற்றது. 

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றையும் ஒருங்கே கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று பாரம்பரிய கலாசார கலைஞர்களின் பவனியுடன் கொடிச்சீலை மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டது. 

இலங்கையில் தமிழர்களின் வரலாற்றினை உலகுக்கு எடுக்காட்டும் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இராம பிரான் வழிபாடுகளை மேற்கொண்டதாக வரலாறுகள் கூறுகின்றன. 

இராமபிரானால் தண்டம் ஊன்றி உருவாக்கப்பட்ட தீர்த்தக்குளம் காணப்படுகின்றது. அதில் உயிர்நீர்த்தவர்களுக்கு பிதிர்கடன்களை நிறைவேற்றும் ஆடி, அமாவாசை தீர்த்தமாடும் தீர்த்தக்கரையாக மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்குளம் காணப்படுகின்றது. 

இன்று காலை விசேட பூஜைகள் நடைபெற்று நண்பகல் 12.00 மணியளவில் கொடியேற்ற நிகழ்வுகள் சிறப்பாக நடைபெறவுள்ளது. 

பத்து தினங்கள் நடைபெறவுள்ள ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி தேர் உற்சவம் நடைபெறவுள்ளதுடன், 12 ஆம் திகதி ஆடிஅமாவாசை தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.


MOST READ

காணொளி
எப்படி அமைச்சரே இதை ஏற்றுக்கொள்வது?

எப்படி அமைச்சரே இதை ஏற்றுக்கொள்வது?

பிரதான பாலத்தின் மேல் பெருக்கெடுத்து ஓடும் வௌ்ளம்!

பிரதான பாலத்தின் மேல் பெருக்கெடுத்து ஓடும் வௌ்ளம்!

இதில் அரசியல் நோக்கம் கிடையாது!

இதில் அரசியல் நோக்கம் கிடையாது!

எங்களின் ஒருமித்த கருத்தைத் தெரிவித்தோம்!

எங்களின் ஒருமித்த கருத்தைத் தெரிவித்தோம்!

தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காகவே ஒன்று கூடியுள்ளோம்!

தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காகவே ஒன்று கூடியுள்ளோம்!

சீரற்ற வானிலையால் மக்கள் பெரும் அசௌகரியம்!

சீரற்ற வானிலையால் மக்கள் பெரும் அசௌகரியம்!

மாகாண சபைத் தேர்தலைப் பழைய முறையில் நடத்துங்கள்!

மாகாண சபைத் தேர்தலைப் பழைய முறையில் நடத்துங்கள்!

3 விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதியிடம் கலந்துரையாடினோம்!

3 விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதியிடம் கலந்துரையாடினோம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

ஆற்றோர மக்களுக்கு எச்சரிக்கை!

ஆற்றோர மக்களுக்கு எச்சரிக்கை!

Mobitel Upahara