Header Logo
செய்திகள்
ஹட்டன் - கொழும்பு வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிப்பு

Aug 3, 2026 - 12:53 PM

ஹட்டன் - கொழும்பு வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிப்பு
Mobitel inner

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் பல இடங்களில் மண்மேடுகள் சரிந்து விழுந்தமையினால் அவ்வீதியூடான போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

​ மண்மேடுகளும், பாறைகளும் வீதியில் சரிந்து வீழ்ந்துள்ளமையினால், ஹட்டனிலிருந்து கினிகத்தேனை, நாவலப்பிட்டி, கண்டி மற்றும் கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வாகனங்களுக்கும், அத்திசைகளிலிருந்து ஹட்டன் நோக்கி செல்லும் வாகனங்களுக்கும் போக்குவரத்துக்கு தடைகள் ஏற்பட்டுள்ளன. 

​ இதன்காரணமாக வீதியின் இருபுறமும் பெருமளவிலான வாகனங்கள் நீண்ட வரிசைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். 

​ மண்மேடுகளை அகற்றி வீதியின் போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவருவதற்காக வீதி அபிவிருத்தி அதிகாரசபையும் பிரதேச மக்களும் இணைந்து செயற்படுகின்றனர். 

​ எவ்வாறாயினும், நிலவும் சீரற்ற வானிலையைக் கருத்திற் கொண்டு மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர். 

​ அதேநேரம் கண்டி - கொழும்பு பிரதான வீதியின் கடுகன்னாவை பகுதியிலும் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MOST READ

காணொளி
எப்படி அமைச்சரே இதை ஏற்றுக்கொள்வது?

எப்படி அமைச்சரே இதை ஏற்றுக்கொள்வது?

பிரதான பாலத்தின் மேல் பெருக்கெடுத்து ஓடும் வௌ்ளம்!

பிரதான பாலத்தின் மேல் பெருக்கெடுத்து ஓடும் வௌ்ளம்!

இதில் அரசியல் நோக்கம் கிடையாது!

இதில் அரசியல் நோக்கம் கிடையாது!

எங்களின் ஒருமித்த கருத்தைத் தெரிவித்தோம்!

எங்களின் ஒருமித்த கருத்தைத் தெரிவித்தோம்!

தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காகவே ஒன்று கூடியுள்ளோம்!

தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காகவே ஒன்று கூடியுள்ளோம்!

சீரற்ற வானிலையால் மக்கள் பெரும் அசௌகரியம்!

சீரற்ற வானிலையால் மக்கள் பெரும் அசௌகரியம்!

மாகாண சபைத் தேர்தலைப் பழைய முறையில் நடத்துங்கள்!

மாகாண சபைத் தேர்தலைப் பழைய முறையில் நடத்துங்கள்!

3 விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதியிடம் கலந்துரையாடினோம்!

3 விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதியிடம் கலந்துரையாடினோம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

ஆற்றோர மக்களுக்கு எச்சரிக்கை!

ஆற்றோர மக்களுக்கு எச்சரிக்கை!

Mobitel Upahara