Header Logo
செய்திகள்
கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் பிற்பகல் 3.00 மணிக்கு திறப்பு

Aug 3, 2026 - 02:50 PM

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் பிற்பகல் 3.00 மணிக்கு திறப்பு
Mobitel inner

தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் மேல் நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, நீர் தேக்கத்தின் பாதுகாப்பு மற்றும் கீழ்நோக்கி ஏற்படக்கூடிய பெருவெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நீர் தேக்கத்தின் வான் கதவுகள் முறைப்படி திறக்கப்படுவதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

இதன்படி, இன்று (03) பிற்பகல் 3.00 மணியளவில்  நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் மற்றும் சேறு வெளியேற்றும் மதகுகள் திறக்கப்படுவதுடன், இதன் மூலம் வினாடிக்கு சுமார் 250 கன அடி வீதத்தில் கொத்மலை ஓயாவுக்கு நீர் திறந்து விட எதிர்பார்க்கப்படுகிறது. 

இதன்காரணமாக கொத்மலை அணைக்கட்டுக்கு கீழ் உள்ள கொத்மலை ஓயாவின் நுகவெல, ரிவர்சைட், மாவத்துர பகுதிகள் மற்றும் மகாவலி கங்கையின் உலப்பனை பகுதியிலிருந்து கம்பளை, வெலிகல்ல, கெலிஓயா, பேராதனை, கடுகஸ்தோட்டை மற்றும் பொல்கொல்லை வரையிலான பகுதிகளிலுள்ள தாழ்நில நிலங்கள் நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுவதால், இது குறித்து அவதானத்துடன் இருக்குமாறு அவ்அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.

MOST READ

காணொளி
எப்படி அமைச்சரே இதை ஏற்றுக்கொள்வது?

எப்படி அமைச்சரே இதை ஏற்றுக்கொள்வது?

பிரதான பாலத்தின் மேல் பெருக்கெடுத்து ஓடும் வௌ்ளம்!

பிரதான பாலத்தின் மேல் பெருக்கெடுத்து ஓடும் வௌ்ளம்!

இதில் அரசியல் நோக்கம் கிடையாது!

இதில் அரசியல் நோக்கம் கிடையாது!

எங்களின் ஒருமித்த கருத்தைத் தெரிவித்தோம்!

எங்களின் ஒருமித்த கருத்தைத் தெரிவித்தோம்!

தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காகவே ஒன்று கூடியுள்ளோம்!

தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காகவே ஒன்று கூடியுள்ளோம்!

சீரற்ற வானிலையால் மக்கள் பெரும் அசௌகரியம்!

சீரற்ற வானிலையால் மக்கள் பெரும் அசௌகரியம்!

மாகாண சபைத் தேர்தலைப் பழைய முறையில் நடத்துங்கள்!

மாகாண சபைத் தேர்தலைப் பழைய முறையில் நடத்துங்கள்!

3 விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதியிடம் கலந்துரையாடினோம்!

3 விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதியிடம் கலந்துரையாடினோம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

ஆற்றோர மக்களுக்கு எச்சரிக்கை!

ஆற்றோர மக்களுக்கு எச்சரிக்கை!

Mobitel Upahara