Aug 3, 2026 - 04:42 PM
களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து பகுதிகளில் தற்போது அதிகளவிலான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அவ் மழை நிலவரம் மற்றும் நீர்ப்பாசன திணைக்களத்தினால் களனி கங்கை ஆற்றுப்படுகையில் பராமரிக்கப்பட்டு வரும் நதி நீர்மானிகளின் நீர்மட்டப் பகுப்பாய்வுகளுக்கு அமைய, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் சில பகுதிகளுக்கு சிறிய அளவிலான வெள்ள அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய தொம்பே, சீதாவாக்கை, ஹோமாகம, கடுவலை, பியகம மற்றும் கொலன்னாவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட களனி கங்கை பள்ளத்தாக்கின் தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போதைய கணிப்புகளுக்கு அமைவாக எதிர்காலத்தில் அதிகளவிலான மழை பெய்யக்கூடும் என்பதால், கங்கையின் நீர்மட்டம் உடனடியாக உயரக்கூடும். எனவே, இப்பகுதிகளில் வாழும் பொதுமக்கள், கங்கையைப் பயன்படுத்துவோர் மற்றும் அப்பகுதிகள் ஊடாக பயணிக்கும் வாகன சாரதிகள் இது குறித்து தீவிர அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

