Aug 3, 2026 - 10:14 PM
ஹெட்டன், கினிகத்தேனை - பொல்பிட்டிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் விபத்துக்குள்ளாகி காணாமல் போயிருந்த நால்வரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது நிலவும் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு நிலைமையினாலேயே இந்த அசம்பாவிதம் சம்பவித்துள்ளது.
அனர்த்தத்தில் காணாமல் போனவர்களைத் தேடும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் போது, முதற்கட்டமாக பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு பெண்களினதும் ஒரு ஆணினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொல்பிட்டிய பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

