Aug 3, 2026 - 11:15 PM
கந்தானை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை (04) பல பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
நீர் விநியோகம் தடைப்படும் பகுதிகள் மற்றும் நேர விவரங்கள் பின்வருமாறு:
மொரட்டுவை (காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை - 5 மணி நேரம்), கொரலவெல்ல, கட்டுக்குருந்த, மோதர, மாதம்பஹவத்த, பொல்வத்த, ஸ்ரீயா பெதேச, குளோவியஸ் மாவத்தை, குணவர்தனராம வீதி, லேக் வலா, புனித பீட்டர் பிரதேசம், பி. எம். பெர்னாண்டோ மாவத்தை, பஹவிதான மாவத்தை, ஜனஜய வீதி, புனித பீட்டர் வீதி, பிரான்சிஸ்கோ பெதேச, எகொடஉயன மற்றும் மெல்வில் வத்த.
பாணந்துறை (காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை - 5 மணி நேரம்):
பாணந்துறை, கிரிபெரிய, ஹிரண, கெஸல்வத்த மற்றும் பின்னவத்த.
பண்டாரகம (காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை - 12 மணி நேரம்):
பண்டாரகம, ரைகம, மில்லனிய, வல்மில்ல, கிதெல்பிட்டிய, அலுபோமுல்ல மற்றும் மொரந்துடுவ.
ஹொரணை (பிற்பகல் 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை - 5 மணி நேரம்):
ஹொரணை, மதுராவல மற்றும் போருவதண்ட.
கும்புக்க (பிற்பகல் 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை - 5 மணி நேரம்):
கும்புக்க, கோனாப்பல, கஹத்துடுவ மற்றும் கிரிவத்துடுவ.
இங்கிரிய (பிற்பகல் 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை - 5 மணி நேரம்):
இங்கிரிய மற்றும் நம்பபான.
பிலியந்தலை (நாளை பிற்பகல் 4.00 மணி முதல் நாளை மறுதினம் (05ஆம் திகதி) காலை 8.00 மணி வரை - 16 மணி நேரம்):
பிலியந்தலை, வேரஹர, மடபாத்த, ஹொன்னந்தர, கெஸ்பேவ, பொல்கஸ்ஓவிட்ட, கஹபொல, மொரட்டுவை வீதி கொஸ்பெலன்ன, கங்காராம வீதி மற்றும் நீலமஹர.
இந்த நீர் விநியோகத் தடையால் நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வருத்தம் தெரிவிப்பதுடன், குறிப்பிடப்பட்டுள்ள காலப்பகுதியில் நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு 1939 என்ற இலக்கத்தை அழைப்பதன் மூலம் தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

