Header Logo
செய்திகள்
60 வயதை பூர்த்தி செய்த பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலதிக சேவை நீடிப்பு!

Aug 4, 2026 - 01:05 PM

60 வயதை பூர்த்தி செய்த பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலதிக சேவை நீடிப்பு!
Mobitel inner

60 வயதைப் பூர்த்தி செய்துள்ள, நன்நடத்தை கொண்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலும் ஒரு வருட சேவை நீடிப்பை வழங்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். 

பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்கள் தொடர்பாக எதிர்க்கட்சியினரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பாராளுமன்றத்தில் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். 

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் 10,000 உறுப்பினர்கள் பொலிஸ் சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 6,000 பேர் இதுவரை கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளதாகவும் அவர் கூறினார். 

பொலிஸ் திணைக்களத்திற்குள் மனிதவள பற்றாக்குறை நிலவுவதை ஏற்றுக்கொள்வதாகவும், அந்த பற்றாக்குறையை முகாமை செய்து, குறிப்பாகக் கீழ்நிலை அதிகாரிகள் எதிர்கொள்ளும் பணிச்சுமையைக் குறைப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

MOST READ

காணொளி
நஷ்டத்தை சந்திக்கும் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதற்காக ஒப்பந்தத்தை வழங்குகின்றோம்!

நஷ்டத்தை சந்திக்கும் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதற்காக ஒப்பந்தத்தை வழங்குகின்றோம்!

கிரகறி வாவியின் வான்கதவு திறப்பு

கிரகறி வாவியின் வான்கதவு திறப்பு

கடந்த கால அரசாங்கத்தைப் போல், அல்ல நாங்கள்!

கடந்த கால அரசாங்கத்தைப் போல், அல்ல நாங்கள்!

கிவுல் ஓயா திட்டம் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது!

கிவுல் ஓயா திட்டம் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது!

எப்படி அமைச்சரே இதை ஏற்றுக்கொள்வது?

எப்படி அமைச்சரே இதை ஏற்றுக்கொள்வது?

பிரதான பாலத்தின் மேல் பெருக்கெடுத்து ஓடும் வௌ்ளம்!

பிரதான பாலத்தின் மேல் பெருக்கெடுத்து ஓடும் வௌ்ளம்!

இதில் அரசியல் நோக்கம் கிடையாது!

இதில் அரசியல் நோக்கம் கிடையாது!

எங்களின் ஒருமித்த கருத்தைத் தெரிவித்தோம்!

எங்களின் ஒருமித்த கருத்தைத் தெரிவித்தோம்!

தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காகவே ஒன்று கூடியுள்ளோம்!

தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காகவே ஒன்று கூடியுள்ளோம்!

சீரற்ற வானிலையால் மக்கள் பெரும் அசௌகரியம்!

சீரற்ற வானிலையால் மக்கள் பெரும் அசௌகரியம்!

Mobitel Upahara