Header Logo
செய்திகள்
பிள்ளையான் ஓகஸ்ட் 18 வரை மீண்டும் விளக்கமறியலில்

Aug 4, 2026 - 04:15 PM

பிள்ளையான் ஓகஸ்ட் 18 வரை மீண்டும் விளக்கமறியலில்
Mobitel inner

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), ஓகஸ்ட் 18 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ. தர்ஷினி முன்னிலையில் இன்று (04) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அவர் காணொளி  வழியே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.  

2008 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 5 கொலைச் சம்பவங்கள் தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) வழக்குத் தொடரப்பட்டிருந்தது.  

அதில் அவர் 3 ஆம் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளதுடன், கல்லடிப் பகுதியில் இடம்பெற்ற ஐந்து கொலைகள் மற்றும் காணிப் பிரச்சினை தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ளன.

MOST READ

காணொளி
செம்மணியின் ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டும்!

செம்மணியின் ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டும்!

ரவிகரன் கோரிக்கை!

ரவிகரன் கோரிக்கை!

அரசின் நடவடிக்கை தான் என்ன?

அரசின் நடவடிக்கை தான் என்ன?

ஹட்டன் - கொழும்பு வீதியில் மீண்டும் போக்குவரத்து!

ஹட்டன் - கொழும்பு வீதியில் மீண்டும் போக்குவரத்து!

கொத்மலை வான் கதவுகள் திறப்பு

கொத்மலை வான் கதவுகள் திறப்பு

செம்மணியில் இதுவரை 481 எலும்புக்கூடுகள் மீட்பு!

செம்மணியில் இதுவரை 481 எலும்புக்கூடுகள் மீட்பு!

நாங்கள் எல்லாவற்றையும் Postive ஆக பார்க்கும் கட்சி!

நாங்கள் எல்லாவற்றையும் Postive ஆக பார்க்கும் கட்சி!

நஷ்டத்தை சந்திக்கும் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதற்காக ஒப்பந்தத்தை வழங்குகின்றோம்!

நஷ்டத்தை சந்திக்கும் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதற்காக ஒப்பந்தத்தை வழங்குகின்றோம்!

கிரகறி வாவியின் வான்கதவு திறப்பு

கிரகறி வாவியின் வான்கதவு திறப்பு

கடந்த கால அரசாங்கத்தைப் போல், அல்ல நாங்கள்!

கடந்த கால அரசாங்கத்தைப் போல், அல்ல நாங்கள்!

Mobitel Upahara