Aug 4, 2026 - 05:25 PM
நீதித்துறையின் சுயாதீனத்தை மேலும் பலப்படுத்துவதற்கும் தேங்கிக்கிடக்கும் வழக்குகளை வினைத்திறனாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் ஏதுவாக அரசியலமைப்பு மற்றும் நீதித்துறைச் சட்டங்களைத் திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கடந்த 2026 ஜூலை 27 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்ட 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றுக்குச் சட்டமா அதிபரின் அரசியலமைப்பு ரீதியான இணக்கப்பாட்டுச் சான்றிதழ் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதற்கமைய, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள குறித்த திருத்தச் சட்டமூலங்களை அரசாங்க வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காகச் சமர்ப்பிப்பதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

