Header Logo
செய்திகள்
கொத்மலை வான் கதவுகள் திறப்பு

Aug 5, 2026 - 08:38 AM

கொத்மலை வான் கதவுகள் திறப்பு
Mobitel inner

கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளும் சேறு போக்கும் மதகுகளும் இன்று (05) காலை திறக்கப்பட்டன.

 

இதன்படி, அதிகப்படியான நீர் வினாடிக்கு 130 கன மீற்றர் வேகத்தில் கொத்மலை ஓயாவிற்கு திறந்து விடப்பட்டுள்ளதாக இலங்கை மகாவலி அதிகார சபையின் பொறுப்புப் பொறியிலாளர் தெரிவித்துள்ளார்.

 

வான் கதவுகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கொத்மலை அணையின் கீழ் பகுதியில் உள்ள நுகவேல, ரிவர்சைட், மாவதுர ஆகிய பிரதேசங்களிலும், மகாவலி கங்கையின் உலப்பனை பகுதி முதல் கம்பளை, வெலிகல்ல, கெலியோயா, பேராதனை, கட்டுகஸ்தோட்டை மற்றும் பொல்கொல்ல வரையிலான தாழ்நிலப் பகுதிகளிலும் வெள்ள அபாயம் காணப்படுவதாக இலங்கை மகாவலி அதிகார சபை எச்சரித்துள்ளது.

 

எனவே, இது குறித்து அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட்டு, உயிர் மற்றும் சொத்துக்களைப் பாதுகாத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை மகாவலி அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது.

 

மேலும், நீர்த்தேக்கத்திற்கு வரும் நீரின் அளவைப் பொறுத்து வெளியேற்றப்படும் நீரின் அளவிலும் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்றும் அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

செம்மறி என்று கூறுவது பிழை!

செம்மறி என்று கூறுவது பிழை!

Mobitel Upahara