Header Logo
செய்திகள்
இரத்மலானை வீட்டின் மேல் குண்டு வீச்சு! பாதாள உலகக் குழுவிற்குத் தொடர்பா?

Aug 5, 2026 - 10:21 AM

இரத்மலானை வீட்டின் மேல் குண்டு வீச்சு! பாதாள உலகக் குழுவிற்குத் தொடர்பா?
Mobitel inner

இன்று (05) அதிகாலை இரத்மலானை, ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் பாதாள உலகக் குழுவின் தொடர்புகள் குறித்துத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருமாடி வீடொன்றின் மீது இரண்டு கைக்குண்டுகள் வீசப்பட்டதாகவும், அதில் ஒன்று வெடித்துள்ள நிலையில் மற்றைய கைக்குண்டு வீட்டின் தோட்டத்தில் விழுந்து கிடந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதலினால் எவருக்கும் எவ்வித உயிராபத்தும் ஏற்படவில்லை என்பதுடன், வீட்டின் இரு ஜன்னல் கண்ணாடிகள் மாத்திரமே சேதமடைந்துள்ளன.

தாக்குதலுக்கு இலக்கான வீட்டின் உரிமையாளர், தற்போது வெளிநாட்டில் வசிப்பதாகக் கூறப்படும் 'ரஸல் அலோசியஸ் ஸ்மித்' என்பவரின் தந்தையின் சகோதரருடைய மகன் எனத் தெரியவந்துள்ளது.

ரஸல் அலோசியஸ் ஸ்மித் என்பவர், பாதாள உலகக் குழுத் தலைவர்களான 'அஞ்சு' எனப்படும் சிங்ஹார அமல் ஷமிந்த சில்வா மற்றும் 'தர்மே' எனப்படும் எல்லாவல லியனகே தர்மசிரி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்துள்ளதாகவும், பின்னர் அஞ்சுவுடன் அவருக்கு முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

MOST READ

காணொளி
செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

செம்மறி என்று கூறுவது பிழை!

செம்மறி என்று கூறுவது பிழை!

Mobitel Upahara