Header Logo
விளையாட்டு
இந்திய பயிற்சியாளராக சேவாக்?

Aug 5, 2026 - 11:28 AM

இந்திய பயிற்சியாளராக சேவாக்?
Mobitel inner

கிரிக்கெட் உலகில் அதிகம் சம்பளம் வழங்கப்படும் பதவியாக இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவி தெரிவிக்கப்படுகிறது. இதனால் இந்திய அணிக்கு பயிற்சியாளராக உலகின் முன்னணி வீரர்கள் போட்டி போடுவது வழக்கமாக உள்ளது. 

அப்படி ஒரு வாய்ப்பு இந்திய அணியின் ஜாம்பவான் வீரரான சேவாக்குக்கு வந்துள்ளது என்ற தகவல் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இது குறித்த தகவலை தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சேவாக் வெளிப்படுத்தியுள்ளார். 

கடந்த 2016 ஆம் ஆண்டு இந்திய அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரர் அணில் கும்ப்ளே நியமிக்கப்பட்டார். ஆனால், தொடக்கத்தில் இருந்தே அவருக்கும் விராட் கோலிக்கும் இடையே மோதல் எழுந்ததாக தொடர்ந்து செய்திகள் வெளியாகின. இதன் காரணமாக அவரின் பதவியை நீட்டிக்க பிசிசிஐ-யும் விரும்பாத நிலையே இருந்தது. 

இந்த சூழலில் விராட் கோலியிடம் அடுத்த பயிற்சியாளர் யார் என்பது குறித்து பிசிசிஐ விவாதித்துள்ளது. அப்போது அவர் சேவாக்கை பரிந்துரை செய்ததாகவும், அதன் அடிப்படையில் அப்போதைய பிசிசிஐ செயலாளர் அமிதாப் சவுத்ரி தன்னை இந்திய அணியின் பயிற்சியாளராக்க அணுகியதாகவும் சேவாக் கூறியுள்ளார். 

மேலும், தான் இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றால், அணியின் உதவி பயிற்சியாளர், பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் பயிற்சியாளர்கள், பிசியோ மற்றும் உடற்பயிற்சியாளர் என எனது உதவியாளர்கள் அனைவரையும் நானே தேர்வு செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்தேன் என்றும், ஆனால், இதற்கு பிசிசிஐ சம்மதிக்காததால் நான் அந்த வாய்ப்பை ஏற்கவில்லை என்றும் சேவாக் கூறியுள்ளார். 

சேவாக் அந்த பதவியை ஏற்காத நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
செம்மணியின் ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டும்!

செம்மணியின் ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டும்!

ரவிகரன் கோரிக்கை!

ரவிகரன் கோரிக்கை!

அரசின் நடவடிக்கை தான் என்ன?

அரசின் நடவடிக்கை தான் என்ன?

ஹட்டன் - கொழும்பு வீதியில் மீண்டும் போக்குவரத்து!

ஹட்டன் - கொழும்பு வீதியில் மீண்டும் போக்குவரத்து!

கொத்மலை வான் கதவுகள் திறப்பு

கொத்மலை வான் கதவுகள் திறப்பு

செம்மணியில் இதுவரை 481 எலும்புக்கூடுகள் மீட்பு!

செம்மணியில் இதுவரை 481 எலும்புக்கூடுகள் மீட்பு!

நாங்கள் எல்லாவற்றையும் Postive ஆக பார்க்கும் கட்சி!

நாங்கள் எல்லாவற்றையும் Postive ஆக பார்க்கும் கட்சி!

நஷ்டத்தை சந்திக்கும் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதற்காக ஒப்பந்தத்தை வழங்குகின்றோம்!

நஷ்டத்தை சந்திக்கும் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதற்காக ஒப்பந்தத்தை வழங்குகின்றோம்!

கிரகறி வாவியின் வான்கதவு திறப்பு

கிரகறி வாவியின் வான்கதவு திறப்பு

கடந்த கால அரசாங்கத்தைப் போல், அல்ல நாங்கள்!

கடந்த கால அரசாங்கத்தைப் போல், அல்ல நாங்கள்!

Mobitel Upahara