Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
மண்சரிவு சிவப்பு எச்சரிக்கைகள் வாபஸ்

Aug 5, 2026 - 12:59 PM

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கைகள் வாபஸ்
Mobitel inner

தொடர்ச்சியாகப் பெய்து வந்த பலத்த மழை காரணமாக விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு பற்றிய முன்னெச்சரிக்கை அறிவிப்பைத் திருத்துவதற்குத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 

இதன்படி கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா ஆகிய மூன்று மாவட்டங்களின் சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்காக விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு சிவப்பு எச்சரிக்கைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

 

இந்த மண்சரிவு முன்னெச்சரிக்கை அறிவிப்பானது இன்று (05) காலை 9.00 மணி முதல் நாளை (06) காலை 9.00 மணி வரை செல்லுபடியாகும்.

 

எச்சரிக்கை மட்டம் 2 – "அவதானமாக இருங்கள்" 

 

  • கண்டி மாவட்டம்: உடபலாத, தொழுவை, மெததும்பர, தெல்தோட்டை, பன்வில, பஸ்பாகே கோரளை, கங்க இஹல கோரளை மற்றும் உடுதும்பர.

  • கேகாலை மாவட்டம்: அரநாயக்க, தெரணியகல, புலத்கோஹுபிட்டிய, தெஹிஓவிட்ட மற்றும் யட்டியாந்தோட்டை.

  • நுவரெலியா மாவட்டம்: நுவரெலியா, கொத்மலை கிழக்கு, கொத்மலை மேற்கு, அம்பகமுவ, நோர்வுட் மற்றும் தலவாக்கலை.

  • இரத்தினபுரி மாவட்டம்: ஓபநாயக்க, இம்புல்பே மற்றும் இரத்தினபுரி.

 

எச்சரிக்கை மட்டம் 1 – "விழிப்பாக இருங்கள்" 

 

  • கேகாலை மாவட்டம்: கேகாலை

  • நுவரெலியா மாவட்டம்: ஹங்குரன்கெத்த.

  • இரத்தினபுரி மாவட்டம்: நிவிதிகல மற்றும் குருவிட்டை.

 

அபாயகரமான பகுதிகளில் வாழும் மக்கள் மண்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் குறித்து தீவிர அவதானத்துடன் இருக்குமாறும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.


MOST READ

காணொளி
ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

Mobitel Upahara