Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
உணவுப் பொதிக்குள் போதைப்பொருள் – பாதியில் மாட்டிக்கொண்ட பாதகர்கள்

Aug 5, 2026 - 01:32 PM

உணவுப் பொதிக்குள் போதைப்பொருள் – பாதியில் மாட்டிக்கொண்ட பாதகர்கள்
Mobitel inner

களுத்துறை சிறைச்சாலைக்கு போதைப்பொருள் கொண்டு செல்ல முயன்ற இருவரை அங்குருவாத்தோட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

ஹொரணை  பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

மில்லனிய - படகொட வீதியில் பொலிஸாரால் வீதித் தடை ஏற்படுத்தப்பட்டு வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போதே, மோட்டார் சைக்கிளில் பயணித்த இந்த இரு சந்தேகநபர்களும் சோதனையிடப்பட்டுள்ளனர். 

 

போதைப்பொருள் குற்றச்சாட்டிற்காக களுத்துறை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள தமது சகோதரரைப் பார்ப்பதற்காக இவர்கள் சென்றுகொண்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது.

 

இவர்களின் சந்தேகத்திற்கிடமான நடத்தையை அடுத்து, மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்ட போது, இரண்டு  'மிக்ஸ் ரைஸ்' உணவுக்குள் மிளகாய் பேஸ்ட் போட்டிருந்த சிறிய பொலித்தீன் உரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 12,400 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

 

அத்துடன், சந்தேகநபர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றும் கைப்பேசி என்பனவும் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக முன்னர் போதைப்பொருள் தொடர்பாக நீதிமன்றங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளமை தெரியவந்துள்ளது.

 

சந்தேகநபர்களை ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், இச்சம்பவம் தொடர்பில் அங்குருவாத்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


MOST READ

காணொளி
ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

Mobitel Upahara