Header Logo
Vallibel FD
Selan Bank
பல்சுவை
வார இறுதியில் மட்டும் கணவன் - மனைவி!

Aug 5, 2026 - 03:30 PM

வார இறுதியில் மட்டும் கணவன் - மனைவி!
Mobitel Inner 1278

திருமணம் என்றாலே ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்வது, குடும்பத்தை இணைந்து நடத்துவது என்பதுதான் பல ஆண்டுகளாக இருந்து வரும் வழக்கமான நடைமுறையாக பார்க்கப்படுகிறது. ஆனால், அந்த பாரம்பரியத்தை மாற்றும் வகையில், புதிய வாழ்க்கை முறை ஒன்று தற்போது உலகின் பல நாடுகளில் கவனத்தை ஈர்த்து வருகிறது. 

இன்றைய இளம் தலைமுறையினரில் பலர், திருமண வாழ்க்கை என்பது தங்களது தனிப்பட்ட சுதந்திரம், தொழில் வளர்ச்சி மற்றும் வாழ்க்கை இலக்குகளை பாதிக்கக்கூடும் என்று கருதுகின்றனர். அதேநேரத்தில், திருமணத்தையும் விரும்புகிறார்கள். இந்த இரண்டுக்கும் இடையே சமநிலையை உருவாக்கும் முயற்சியாக தற்போது பேசப்பட்டு வரும் புதிய வாழ்க்கை முறைதான். 

இந்த வாழ்க்கை முறையில், கணவன் - மனைவி இருவரும் வார நாட்களில் தங்களது வேலை, தொழில் அல்லது படிப்பு காரணமாக தனித்தனியாக வசிக்கலாம். வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஒன்றாக நேரம் செலவிடுவார்கள். 

இந்த புதிய வாழ்க்கை முறை தற்போது குறிப்பாக Gen Z தலைமுறையினரிடையே ஏன் பிரபலமடைந்து வருகிறது? இதன் பின்னணியில் உள்ள காரணங்கள் என்ன? என்பதை பார்க்கலாம். 

உலகம் முழுவதும் வேலைவாய்ப்பு, உயர்கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்காக பலர் வெவ்வேறு நகரங்களிலும், நாடுகளிலும் வசித்து வருகின்றனர். திருமணத்திற்குப் பிறகும் தங்களது தொழில் மற்றும் தனிப்பட்ட இலக்குகளை விட்டுக்கொடுக்க விரும்பாத தம்பதிகள், உறவையும் சுதந்திரத்தையும் சமநிலைப்படுத்தும் வழியாக இந்த Weekend Marriage முறையை தேர்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. 

குறிப்பாக ஜப்பான், தென் கொரியா, சீனா, அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் இந்த வாழ்க்கை முறை குறித்து அதிகளவில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. 

தனிப்பட்ட சுதந்திரம், தொழில் முன்னேற்றம், மனஅழுத்தம் குறைவு, ஒருவருக்கொருவர் தனிப்பட்ட இடைவெளியை மதிப்பது போன்ற காரணங்களுக்காக சிலர் இந்த வாழ்க்கை முறையை தேர்வு செய்கின்றனர். இன்றைய Gen Z தலைமுறையினர், திருமணம் வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே, வாழ்க்கையே திருமணம் அல்ல என்ற அணுகுமுறையை அதிகம் விரும்புவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

அதேநேரத்தில், இந்த வாழ்க்கை முறைக்கு ஆதரவும் எதிர்ப்பும் இருந்து வருகிறது. வார இறுதியில் மட்டும் சந்திப்பதால், ஒன்றாக செலவிடும் நேரத்திற்கு அதிக முக்கியத்துவம் கிடைப்பதாகவும், தேவையற்ற சிறிய குடும்பத் தகராறுகள் குறைய வாய்ப்புள்ளதாகவும் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். 

மறுபுறம், நீண்ட நாட்கள் ஒன்றாக வாழாததால் உணர்வுப்பூர்வமான நெருக்கம் குறையலாம் என்றும், குழந்தைகள் இருந்தால் அவர்களின் வளர்ப்பு மற்றும் குடும்ப பொறுப்புகளை பகிர்ந்து கொள்வதில் சவால்கள் உருவாகலாம் என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர். 

சமீப காலமாக சமூக வலைதளங்களிலும், வாழ்க்கை முறை தொடர்பான இணையதளங்களிலும் Weekend Marriage குறித்து அதிகளவில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. 

திருமணம் என்பது ஒரே வீட்டில் வாழ்வதா? இல்லை, ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ்வதா? என்ற கேள்வியை மீண்டும் எழுப்பியிருக்கிறது இந்த Weekend Marriage இது வெறும் சமூக வலைதள ட்ரெண்டாகவே மறைந்துவிடுமா? அல்லது எதிர்கால குடும்ப வாழ்க்கையின் ஒரு புதிய வடிவமாக மாறுமா? என்பதற்கான பதிலை காலம்தான் சொல்ல வேண்டும்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Mobitel 1278