Header Logo
செய்திகள்
மகாவலி கங்கையை அண்மித்த பகுதிகளுக்கு வௌ்ள அபாயம்

Aug 5, 2026 - 04:11 PM

மகாவலி கங்கையை அண்மித்த பகுதிகளுக்கு வௌ்ள அபாயம்
Mobitel inner

மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அத்துடன், அப்பகுதிகளில் மகாவலி கங்கைக்கு அருகில் உள்ள தாழ்நிலங்களில் வசிக்கும் பொதுமக்கள் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், ஏற்படக்கூடிய வெள்ளப் பெருக்கிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

மகாவலி கங்கையின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மேலும் மழை பெய்யக்கூடும் என்ற முன்னறிவிப்பு மற்றும் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமை காரணமாக, மகாவலி கங்ககைக்கு உட்பட்ட உடுநுவர, உடபலாத, யடிநுவர, தொலுவ, கங்க இஹல கோரள, கங்கவட கோரள மற்றும் ஹாரிஸ்பத்துவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த மகாவலி கங்கையை ஒட்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கே முக்கியமாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இடர்முகாமைத்துவப் பிரிவுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

தொடர்ந்தும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் இது குறித்து மிகவும் அவதானத்துடன் செயல்படுமாறு மேலும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


MOST READ

காணொளி
செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

செம்மறி என்று கூறுவது பிழை!

செம்மறி என்று கூறுவது பிழை!

Mobitel Upahara