Header Logo
செய்திகள்
ஹோர்முஸ் நீரிணை பாதை தொடர்பில் ஈரானும், ஓமானும் இணக்கம்

Aug 5, 2026 - 10:17 PM

ஹோர்முஸ் நீரிணை பாதை தொடர்பில் ஈரானும், ஓமானும் இணக்கம்
Mobitel inner

ஹோர்முஸ் நீரிணை ஊடான கப்பல் போக்குவரத்துப் பாதைக்கான புவியியல் எல்லைகள் குறித்து ஈரானும் ஓமானும் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சில மூன்றாம் தரப்பினர் தலையிடாவிட்டால் இதற்கான கூட்டு அறிவிப்பொன்று இறுதி செய்யப்பட்டு வருவதாக ஈரான் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் இஸ்மாயில் பஹாயி தெரிவித்தார். 

ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையிலான இவ்வாறான எந்தவொரு ஒப்பந்தமும், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த குறித்த நீர்வழியில் பாதுகாப்பிற்குத் தாமாகவே உத்தரவாதமளிக்காது எனவும் பஹாயி மேலும் குறிப்பிட்டார். 

ஈரானுக்கு இதுவரை வழங்கப்பட்ட மிகப்பெரிய விட்டுக்கொடுப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையிலான இந்த உத்தேச ஒப்பந்தமானது, ஹோர்முஸ் நீரிணை வழியாக வளைகுடாவிற்குள் நுழையும் கப்பல்கள் மீதான கட்டுப்பாட்டை தெஹ்ரானுக்கு வழங்கும் என ஈரானிய சிரேஷ்ட சிரேஷ்ட அதிகாரி ஒருவரும், இரண்டு பிராந்திய அதிகாரிகளும் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர். 

ஈரானின் கோரிக்கைகளுக்கு அடிபணியும் வகையிலான வெளிப்படையான நகர்வுகள் காணப்பட்ட போதிலும், முக்கிய விடயங்கள் தொடர்பில் இன்னும் உடன்பாடு எட்டப்பட வேண்டி உள்ளதாகத் தெரிவித்து, நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தம் ஒன்று உடனடியாக எட்டப்படவுள்ளது என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கூற்றுகளை குறித்த வட்டாரங்கள் நிராகரித்தன.

MOST READ

காணொளி
செம்மணியின் ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டும்!

செம்மணியின் ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டும்!

ரவிகரன் கோரிக்கை!

ரவிகரன் கோரிக்கை!

அரசின் நடவடிக்கை தான் என்ன?

அரசின் நடவடிக்கை தான் என்ன?

ஹட்டன் - கொழும்பு வீதியில் மீண்டும் போக்குவரத்து!

ஹட்டன் - கொழும்பு வீதியில் மீண்டும் போக்குவரத்து!

கொத்மலை வான் கதவுகள் திறப்பு

கொத்மலை வான் கதவுகள் திறப்பு

செம்மணியில் இதுவரை 481 எலும்புக்கூடுகள் மீட்பு!

செம்மணியில் இதுவரை 481 எலும்புக்கூடுகள் மீட்பு!

நாங்கள் எல்லாவற்றையும் Postive ஆக பார்க்கும் கட்சி!

நாங்கள் எல்லாவற்றையும் Postive ஆக பார்க்கும் கட்சி!

நஷ்டத்தை சந்திக்கும் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதற்காக ஒப்பந்தத்தை வழங்குகின்றோம்!

நஷ்டத்தை சந்திக்கும் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதற்காக ஒப்பந்தத்தை வழங்குகின்றோம்!

கிரகறி வாவியின் வான்கதவு திறப்பு

கிரகறி வாவியின் வான்கதவு திறப்பு

கடந்த கால அரசாங்கத்தைப் போல், அல்ல நாங்கள்!

கடந்த கால அரசாங்கத்தைப் போல், அல்ல நாங்கள்!

Mobitel Upahara