Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
விருதுகளை வென்ற Vietjet ஆகஸ்ட் மாத Double Day Sale இல் வியட்னாமுக்கு விமான டிக்கட்கள் USD90 இலிருந்து அறிமுகம்

Aug 6, 2026 - 01:57 PM

விருதுகளை வென்ற Vietjet ஆகஸ்ட் மாத Double Day Sale இல் வியட்னாமுக்கு விமான டிக்கட்கள் USD90 இலிருந்து அறிமுகம்
Mobitel Inner 1278

கொழும்பு மற்றும் Ho Chi Minh City இடையிலான தனது முதலாவது விமானச் சேவை அறிமுகத்திற்கு சில நாட்கள் எஞ்சியுள்ள நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Vietjet இன் Double Day Sale சலுகை விற்பனை மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த 8.8 விசேட சலுகை, குறித்த வான்வழிக்கான ஒருவழி Eco பயணச்சீட்டுகளை வரிகள் மற்றும் கட்டணங்கள் உட்பட 90 அமெரிக்க டொலர்கள் முதல் வழங்குகிறது. மேலும், பிரீமியம் ரகப் பயணச்சீட்டுகளுக்கு 30% வரை விலைக்கழிவும், முன்கூட்டியே ஓடர் செய்யப்படும் உணவுச் சேர்க்கைகளுக்கு 50% விலைக்கழிவையும் வழங்குகின்றது. இது இலங்கைப் பயணிகளுக்கு வியட்நாமுக்கான தங்கள் பயணங்களைத் திட்டமிடுவதற்கான சிறந்ததொரு சந்தர்ப்பத்தை அளிக்கிறது. அத்துடன், Vietjet இன் முக்கிய சர்வதேசச் சந்தைகளில் ஒன்றான தென்கொரியாவில், அந்நிறுவனம் முதன்முறையாக Best Hybrid Airline எனப் பெயரிடப்பட்ட சிறப்புடன் இச்சலுகை அறிவிப்பும் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தற்போதிலிருந்து 2026 ஓகஸ்ட் 8 ஆம் திகதி இரவு 21:30 மணி வரை (இலங்கை நேரப்படி), எதிர்வரும் கொழும்பு – Ho Chi Minh City சேவை உள்ளடங்கலாக, Vietjet இன் அனைத்து விமான வலையமைப்பிலும் இலங்கையைச் சேர்ந்த பயணிகள் சலுகை அடிப்படையிலான Eco கட்டணங்களை அனுபவிக்க முடியும். பதிவுகளை www.vietjetair.com இணையதளம், Vietjet Air மொபைல் செயலி மற்றும் ஏனைய விற்பனை வழிகள் ஊடாக மேற்கொள்ளலாம். இச்சலுகை 2026 செப்டம்பர் 5 முதல் 2027 மார்ச் 31 வரை மேற்கொள்ளப்படும் பயணங்களுக்குப் செல்லுபடியாகும் (பொது விடுமுறை நாட்கள் மற்றும் அதிக தேவை நிலவும் பயணக் காலப்பகுதிகள் விலக்களிக்கப்படுவதுடன், சந்தை நிலைமைகளுக்கு உட்பட்டது). 

அத்துடன், பயணிகள் BUSB88 என்ற விளம்பரக் குறியீட்டைப் பயன்படுத்துவதன் மூலம், Vietjet இன் அனைத்து நேரடி சர்வதேச விமானங்களினதும் Business மற்றும் SkyBoss பயணக் கட்டணங்களில் 30% வரை சேமிக்க முடியும். மேலும், DLX88 எனும் விளம்பரக் குறியீட்டைப் பயன்படுத்தி, Hanoi, Almaty மற்றும் Prague நகரங்களுக்கிடையிலான விமானச் சேவைகளுக்கான Deluxe கட்டணங்களில் 20% விசேட விலைக்கழிவைப் பெற்றுக்கொள்ளலாம். 

ஒவ்வொரு பயணத்தையும் மேலும் மகிழ்ச்சிகரமானதாக மாற்றும் வகையில், உணவுச் சேர்க்கைகளை முன்கூட்டியே ஓடர் செய்யும் பயணிகளுக்கு 50% உடனடித் விலைக்கழிவு வழங்கப்படும். இச்சலுகை 2026 ஓகஸ்ட் 18 முதல் 2027 மார்ச் 31 வரையிலான பயணங்களுக்கு, Vietjet இன் அனைத்து விமான வழிகளிலும் (இணைப்பு விமானப் பயணங்கள் தவிர்த்து) கிடைக்கப்பெறும். இலங்கைப் பயணிகள் 2026 ஓகஸ்ட் 18 ஆம் திகதி ஆரம்பமாகும் Vietjet இன் கொழும்பு – Ho Chi Minh City சேவை தொடங்கப்படுவது முதல் இச்சலுகையைப் பெற்றுக்கொள்ள முடியும். 

கொரியா நுகர்வோர் விருதுகள் 2026 நிகழ்வில், Best Inflight Food Experience மற்றும் Service Excellence ஆகிய விருதுகளுடன் சேர்த்து முதன்முறையாக Best Hybrid Airline ஆக Vietjet பெயரிடப்பட்டதைத் தொடர்ந்து, விமானச் சேவையின் மற்றொரு மைல்கல்லாக இந்த விசேட சலுகைப் பிரச்சாரம் அமைகின்றது. இந்த அங்கீகாரம், தனது Eco, Deluxe, SkyBoss மற்றும் Business பிரிவுக் கட்டணத் தெரிவுகளின் கீழ் குறைந்த விலைக் கட்டணங்களுடன் மேம்படுத்தப்பட்ட தயாரிப்புகள் மற்றும் சேவைகளை ஒன்றிணைத்து, ஒரு “ஹைப்ரிட்” விமானச் சேவையாக Vietjet உருவெடுத்துள்ள வெற்றிகரமான மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது. 

நாடளாவிய நுகர்வோர் கணக்கெடுப்புகள் மற்றும் நிபுணர் நடுவர் குழுவின் மதிப்பீடுகளின் அடிப்படையில் தென்கொரிய நுகர்வோரால் நம்பப்படும் வர்த்தக நாமங்களை “கொரியா நுகர்வோர் விருதுகள்” அங்கீகரிக்கின்றன. இவ்விருது விழாவில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும் விருதுகளைப் பெற்ற ஒரே வெளிநாட்டு விமானச் சேவை நிறுவனம் Vietjet என்பதுடன், 2026 ஆம் ஆண்டிற்கான தென்கொரியாவின் “39 மிகவும் நம்பகமான நுகர்வோர் வர்த்தக நாமங்களில்” ஒன்றாக இந்நிறுவனம் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்த உருமாற்றத்தின் தொடர்ச்சியாக, பயணிகளுக்கு கூடுதல் தெரிவுகளையும் இணைப்பு வசதிகளையும் வழங்குவதற்காக, Vietjet தனது விமான வலையமைப்பை விரிவுபடுத்துவதில் தொடர்ந்தும் முதலீடு செய்து வருகிறது. இலங்கையிலான தனது ஆரம்ப விமானச் சேவைக்கு மேலதிகமாக, இவ்வருட பிற்பகுதியில் Hanoi, Prague (Czech Republic) மற்றும் Almaty (Kazakhstan) ஆகிய நகரங்களுக்கான புதிய விமானப் பாதைகளையும் இந்நிறுவனம் ஆரம்பிக்கவுள்ளது. இது அதன் சர்வதேச வலையமைப்பை மேலும் வலுப்படுத்தும். Ho Chi Minh City ஊடாக, கொழும்பிலிருந்து பயணிக்கும் பயணிகள் வியட்நாம், ஆசியா-பசிபிக் மற்றும் அதற்கு அப்பால் உள்ள ஏனைய இடங்களுக்கு இலகுவான தொடர் விமான இணைப்புகளைப் பெற்றுக்கொள்ள முடியும். 

Vietjet மூலம் பயணிக்கும் பயணிகள் நவீன, எரிபொருள் திறன்மிக்க விமானப் படை, நெகிழ்வுத்தன்மை கொண்ட கட்டணத் தெரிவுகள், தொழில்முறை மற்றும் கனிவான சேவை ஆகியவற்றைப் பெற்று மகிழ முடியும். அத்துடன், pho மற்றும் banh mi போன்ற வியட்நாமிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற உணவுகள், புகழ்பெற்ற வியட்நாமிய ஐஸ் மில்க் கோப்பி உட்பட புதிதாகத் தயாரிக்கப்படும் சூடான உணவுகளின் பலதரப்பட்ட தெரிவுகளையும் பயணிகள் அனுபவிக்கலாம். மேலும், தெரிவுசெய்யப்பட்ட விசேட விமானப் பயணங்களில் பிரத்யேக கலாச்சார நிகழ்வுகளும் அரங்கேற்றப்படுகின்றன. இது வெறும் போக்குவரத்துச் சேவையைத் தாண்டி, பயணிகளுக்கு மறக்கமுடியாத அனுபவங்களை உருவாக்குகிறது. 

Vietjet பற்றி: 

புதுயுக விமானச் சேவை நிறுவனமான Vietjet, வியட்நாமின் வான்வழித் துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், பிராந்திய அளவிலும் உலகளாவிய ரீதியிலும் ஒரு முன்னோடி விமானச் சேவையாகத் திகழ்ந்து வருகின்றது. இந்நிறுவனம் தற்போது 135 விமானங்களைக் கொண்ட கட்டமைப்பை இயக்கி வருவதுடன், பரந்த மற்றும் குறுகிய உடல் அமைப்பைக் கொண்ட இருவகை விமானங்களையும் உள்ளடக்கியதாக கிட்டத்தட்ட 600 புதிய விமானங்களுக்கான கொள்வனவுப் பதிவுகளையும் மேற்கொண்டுள்ளது. செலவின முகாமைத்துவத் திறன், பயனுள்ள செயல்பாடுகள் மற்றும் செயற்திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதுடன், அனைத்து நடவடிக்கைகளிலும் அதிநவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தி புதிய போக்குகளுக்குத் தலைமை வகிக்கும் Vietjet, வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் பலதரப்பட்ட சேவைகளுடன் கூடிய கட்டணச் சேமிப்பு மற்றும் நெகிழ்வுத்தன்மை மிக்க வான்வழிப் பயண வாய்ப்புகளை வழங்குகின்றது. Vietjet நிறுவனம், சர்வதேச வான்வழிப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) செயற்பாட்டு பாதுகாப்பு கணக்காய்வு (IOSA) சான்றிதழைப் பெற்ற ஒரு முழு அளவிலான அங்கத்துவ நிறுவனமாகும். 

வியட்நாமின் மிகப்பெரிய தனியார் விமானச் சேவை நிறுவனமான இதற்கு, உலகின் ஒரே ஒரு பாதுகாப்பு மற்றும் தயாரிப்பு மதிப்பீட்டு இணையத்தளமான airlineratings.com நிறுவனத்தினால் பாதுகாப்பிற்கான மிக உயர்ந்த 7 நட்சத்திர அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், Airfinance Journal இனால் தொடர்ந்து பல வருடங்களாக ஆரோக்கியமான நிதிநிலை மற்றும் செயல்பாடுகளைக் கொண்ட உலகின் சிறந்த 50 விமானச் சேவை நிறுவனங்களில் ஒன்றாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. அத்துடன், Skytrax, CAPA, Airline Ratings போன்ற புகழ்பெற்ற சர்வதேச அமைப்புகளினால் உலகின் சிறந்த குறைந்த கட்டண விமானச் சேவை நிறுவனம் எனவும் Vietjet பலமுறை பெயரிடப்பட்டுள்ளது. 

மேலதிக தகவல்களுக்கு பார்க்கவும் www.vietjetair.com

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

Mobitel 1278