Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் ஸ்ரீலங்காவின் செல்வம் மற்றும் தனிநபர் வங்கிச்சேவை வணிகத்தை கையகப்படுத்தும் பணியை DFCC வங்கி நிறைவு செய்துள்ளது

Aug 6, 2026 - 02:02 PM

ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் ஸ்ரீலங்காவின் செல்வம் மற்றும் தனிநபர் வங்கிச்சேவை வணிகத்தை கையகப்படுத்தும் பணியை DFCC வங்கி நிறைவு செய்துள்ளது
Mobitel Inner 1278

ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி ஸ்ரீலங்காவின் செல்வம் மற்றும் தனிநபர் வங்கிச்சேவை வணிகத்தை கையகப்படுத்தும் பணியை நிறைவு செய்துள்ளதாக DFCC வங்கி பிஎல்சி அறிவித்துள்ளது. சுமார் 50,000 வாடிக்கையாளர்கள், இந்த வணிகத்தைச் சேர்ந்த சக ஊழியர்களுடன் சேர்ந்து, தற்போது DFCC வங்கியில் இணைந்துள்ளனர். 

இந்த பரிவர்த்தனையானது முன்னுரிமை வங்கிச் சேவை, கடன் அட்டைகள், தனிநபர் கடன் வழங்கல், வைப்புக்கள், செல்வ முகாமைத்துவம் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஆகிய பிரிவுகளில் உள்ள வாடிக்கையாளர் பிரத்தியேக சேவைகளையும், தேர்ந்தெடுக்கப்பட்ட செயல்பாட்டுச் சொத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது. இது DFCC வங்கியின் தனிநபர், செல்வ முகாமைத்துவம், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சார்ந்த திறன்களை வலுப்படுத்துவதோடு, இந்த வணிகங்களின் அளவையும் பரவலையும் விரிவுபடுத்துகிறது. 

வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரை, இந்த மாற்றம் தொடர்ச்சியை மையமாகக் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது. பல மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட விரிவான தயாரிப்புப் பணிகள் மற்றும் இரு நிறுவனங்களுக்கு இடையேயான நெருங்கிய ஒத்துழைப்பு, வாடிக்கையாளர்கள் அன்றாடம் பயன்படுத்தும் வங்கிச் சேவைகள், உறவுகள் மற்றும் சேவைகளைத் தக்கவைத்துக் கொள்ள வழிவகுத்துள்ளது. அவர்களின் தற்போதைய ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் கணக்கு இலக்கங்கள், புதிய DFCC வங்கி கணக்கு இலக்கங்களுடன் தொடர்ந்து பயன்படுத்தக் கூடியதாக இருக்கும். அதே நேரத்தில், அவர்களின் தற்போதைய கடன் மற்றும் டெபிட் அட்டைகள், அட்டை PIN குறியீடுகள், நிலையான அறிவுறுத்தல்கள், நேரடிப் பற்றுக்கள் மற்றும் தொடர் கொடுப்பனவு ஏற்பாடுகள் முன்பைப் போலவே தொடர்கின்றன. 

சேமிக்கப்பட்ட பெறுநர்கள் (payee) மற்றும் பயனாளிகளும் (beneficiary) வங்கியின் டிஜிட்டல் வங்கிச்சேவைத் தளங்களான DFCC ONE மற்றும் DFCC iConnect-க்கு மாற்றப்பட்டுள்ளனர். இது, வங்கியை மாற்றும்போது வாடிக்கையாளர்கள் சந்திக்கும் முக்கிய சிரமங்களில் ஒன்றை நீக்குகிறது. ஏற்கனவே கிளை மற்றும் பிரத்தியேக சேவை முகாமையாளர் ஏற்பாடுகளைக் கொண்ட வாடிக்கையாளர்கள், தாங்கள் ஏற்கனவே அறிந்த மற்றும் நம்பும் அதே கிளைகள் மற்றும் பிரத்தியேக சேவை முகாமையாளர்கள் மூலம் தொடர்ந்து வங்கிச் சேவைகளைப் பெறலாம். இப்போது DFCC வங்கியின் வாடிக்கையாளர்களாகியுள்ளவர்கள் வங்கியின் விரிவான தனிநபர் வங்கிச் சேவைகள், செல்வ முகாமைத்துவம், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான சேவைகள், அட்டை மற்றும் கடன் தீர்வுகளைப் பெறலாம். DFCC வங்கியின் நாடு தழுவிய 130-க்கும் அதிகமான கிளைகளின் வலையமைப்பு, LankaPay வலையமைப்பு மூலம் 5,000-க்கும் மேற்பட்ட ஏடிஎம்களுக்கான (ATM) அணுகல், DFCC ONE, DFCC iConnect மற்றும் பிரத்தியேக வாடிக்கையாளர் சேவை வழிகள் ஆகியவை அவர்களுக்கு ஆதரவளிக்கின்றன. தகுதியுள்ள வாடிக்கையாளர்கள், வங்கியின் உயர்தர வங்கிச் சேவையான DFCC Pinnacle-ஐயும் அணுகலாம். 

தனிநபர் மற்றும் செல்வ முகாமைத்துவ வணிகத்தை விரிவுபடுத்துவதற்கும், அதன் சிறு மற்றும் நடுத்தர நிறுவன வணிகத்தை வலுப்படுத்துவதற்கும், இலங்கை முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் சிறப்பாக சேவை வழங்கும் திறனை மேம்படுத்துவதற்கும் ஆன DFCC வங்கியின் நீண்டகால மூலோபாயத்தில் இந்தக் கையகப்படுத்தல் ஒரு முக்கிய படியாகும். இந்தப் பணியின் நிறைவு குறித்துக் கருத்துத் தெரிவித்த DFCC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி திமால் பெரேரா, “ஆரம்பத்திலிருந்தே, வாடிக்கையாளர்களுக்கு இந்த மாற்றத்தை முடிந்தவரை தங்குதடையற்றதாகவும், பழக்கமானதாகவும் மாற்றுவதில் எங்கள் கவனம் இருந்தது. அந்த அனுபவத்தின் பின்னணியில், பல மாத கால விரிவான திட்டமிடல், நெருங்கிய ஒத்துழைப்பு மற்றும் இரு நிறுவனங்களின் குழுக்களின் அசாதாரண முயற்சி ஆகியவற்றின் துணைகொண்ட மிகவும் சிக்கலான தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு இடம்பெற்றது. 

“வாடிக்கையாளர்கள் அந்தச் சிக்கலை முடிந்தவரை குறைவாக அனுபவிப்பதை உறுதி செய்வதே வெற்றியாகும். அவர்களின் தற்போதைய ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் கணக்கு இலக்கங்கள், அவர்களின் புதிய DFCC வங்கி கணக்கு இலக்கங்களுடன் தொடர்ந்து பயன்படுத்தக்கூடியதாக இருக்கும். அவர்கள் அதே கடன் மற்றும் டெபிட் அட்டைகளையும், அதே அட்டை PIN இலக்கங்களையும் தொடர்ந்து பயன்படுத்தலாம். அதே நேரத்தில், அவர்களின் நிலையான அறிவுறுத்தல்கள், நேரடிப் பற்றுகள், தொடர் கொடுப்பனவுகள், தவணைக் கொடுப்பனவு ஏற்பாடுகள் மற்றும் பிற அன்றாட வங்கிச்சேவை ஏற்பாடுகள் முன்பைப் போலவே தொடரும். நாங்கள் அவர்களின் சேமிக்கப்பட்ட பெறுநர்கள் மற்றும் பயனாளர்களையும் எங்கள் டிஜிட்டல் வங்கித் தளங்களுக்கு மாற்றியுள்ளோம். இதன் மூலம், வங்கியை மாற்றும்போது வாடிக்கையாளர்கள் சந்திக்கும் முக்கிய சிரமங்களில் ஒன்றை நீக்கியுள்ளோம். ஏற்கனவே கிளை மற்றும் பிரத்தியேக சேவை முகாமையாளர் ஏற்பாடுகளைக் கொண்ட வாடிக்கையாளர்கள், தாங்கள் ஏற்கனவே அறிந்து நம்பும் அதே கிளைகள் மற்றும் பிரத்தியேக சேவை முகாமையாளர்கள் மூலமாகத் தொடர்ந்து வங்கிச் சேவைகளைப் பெறலாம். DFCC வங்கியிலுள்ள எனது சக ஊழியர்கள், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி மற்றும் இலங்கை மத்திய வங்கியில் உள்ள எமது சகாக்கள், எங்களது தொழில்நுட்ப மற்றும் செயலாக்கக் கூட்டாளர்கள், மற்றும் இத்திட்டத்தை சாத்தியமாக்கிய தங்களின் நிபுணத்துவம் மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். DFCC வங்கிக்கு எங்களது புதிய வாடிக்கையாளர்களையும் சக ஊழியர்களையும் வரவேற்பதை ஒரு பெருமையாகக் கருதுகிறேன். 

அவர்களின் நம்பிக்கையைப் பெறுவதையும், அவர்களின் நிதிசார் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களுக்குத் துணையாக இருப்பதையும் நாங்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம்.” ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் ஸ்ரீலங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரி பிங்குமல் தேவரதந்திரி அவர்கள் மேலும் கூறுகையில், “இந்த மாற்றம், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் குழுமத்தின் உலகளாவிய மூலோபாயத்திற்கு இணங்க எடுக்கப்பட்ட ஒரு முக்கிய முடிவாகும்; அதாவது, எங்களிடம் போதுமான செயல்பாட்டு அளவும் தனித்துவமான சிறப்பம்சங்களும் உள்ள துறைகளில் எங்கள் வளங்களை மையப்படுத்துவதே இதன் நோக்கமாகும். பல ஆண்டுகளாக எங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கும், இந்த மாற்றத்தின் போது தங்கள் தொழில்முறை அணுகுமுறையையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்திய எங்கள் சக ஊழியர்களுக்கும் நாங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். DFCC வங்கிக்கு மாறியுள்ள எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு எங்கள் நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு, எதிர்காலத்திலும் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறோம். 

உதவி தேவைப்படும் வாடிக்கையாளர்கள், DFCC வங்கியின் 24 மணிநேர வாடிக்கையாளர் சேவை மையத்தை +94 11 235 0000 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம் அல்லது ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் தற்போதைய வாடிக்கையாளர் சேவை இலக்கமான +94 11 248 0480-ஐத் தொடர்ந்து பயன்படுத்தலாம்;. இந்த இலக்கத்திற்கான அழைப்புகள் இப்போது DFCC வங்கிக்கு இணைக்கப்படுகின்றன. மேலும், வாடிக்கையாளர்கள் DFCC வங்கியின் ஏதேனும் ஒரு கிளைக்கு நேரில் செல்லலாம் அல்லது www.dfcc.lk/welcome என்ற இணையத்தளம் மூலம் மேலும் தகவல்களையும் தேவையான உதவியையும் பெறலாம்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

Mobitel 1278