Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
இலங்கையில் முதலாவது மகப்பேற்றுக்குப் பிந்தைய பிரத்தியேக பராமரிப்பு நிலையத்தை ஜோசப் பிரேசர் நைன்வெல்ஸ் இன் ParentX அறிமுகப்படுத்துகிறது ஜோசப் பிரேசர்

Aug 6, 2026 - 02:18 PM

இலங்கையில் முதலாவது மகப்பேற்றுக்குப் பிந்தைய பிரத்தியேக பராமரிப்பு நிலையத்தை ஜோசப் பிரேசர் நைன்வெல்ஸ் இன் ParentX அறிமுகப்படுத்துகிறது  ஜோசப் பிரேசர்
Mobitel Inner 1278

ஜோசப் பிரேசர் நைன்வெல்ஸ் வைத்தியசாலையினால் (Joseph Fraser Ninewells Hospital) நிர்மாணிக்கப்பட்டுள்ள ParentX பிரிவானது, இலங்கையின் முதலாவது மகப்பேற்றுக்குப் பிந்jpய பிரத்தியேக பராமரிப்பு நிலையத்தை (postpartum retreat) அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் குழந்தை பிறப்பகுப் பின்னரான தாயின் மீட்சி மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு ஆகியவற்றிற்கான சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மாதிரிக் கட்டமைப்பை இவ்வைத்தியசாலை இலங்கைக்குக் கொண்டுவந்துள்ளது. பிரசவத்திற்குப் பிந்jpய முக்கியமான வாரங்களில் தாய்மார்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ParentX, ஒரு குழந்தையின் பிறப்பிற்கு எந்தளவு முக்கியத்துவம் அளிக்கிறதோ, அதே அளவிலான முக்கியத்துவத்தை தாயின் உடலியல் மற்றும் மன ரீதியான மீட்சிக்கும் வழங்குகிறது. 

பிரசவத்திற்குப் பிந்jpய மிக முக்கியமான 12 வாரங்கள் ‘Fourth Trimester’ என அழைக்கப்படுகின்றது. சர்வதேச ரீதியில் இதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு அதிகரித்து வந்த போதிலும், தாய்மைக்கான மிகவும் குறைந்தளவு ஆதரவு கிடைக்கும் நிலைகளில் ஒன்றாக இது இருந்து வருகிறது. உலகம் முழுவதிலும், பிரசவத்திற்குப் பிந்jpய பராமரிப்பு மையங்கள் தாய்மையின் பராமரிப்பின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளன. இது தாய்மார்கள் உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும், மன ரீதியாகவும் மீட்சியடைய உதவுவதுடன், தங்களது பிறந்த குழந்தையை பராமரிப்பதில் நம்பிக்கையை வளர்க்கவும் உதவுகின்றன. இந்த மாதிரிக் கட்டமைப்பை இலங்கையில் உள்ள குடும்பங்களின் தேவைகள், பாரம்பரியங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளுக்கு ஏற்ப கவனமாக உள்ளீர்த்து, ParentX நாட்கு அறிமுகப்படுத்துகிறது. 

இதன் அறிமுகம் குறித்து ஜோசப் பிரேசர் மருத்துவமனையின் உதவிப் பொது முகாமையாளர் யூசுப் சாபிர் கருத்துத் தெரிவிக்கையில், ஒரு தாய்க்கான பராமரிப்பு என்பது அவளது குழந்தையின் பிறப்புடன் முடிந்துவிடக் கூடாது. பிரசவத்திற்குப் பிந்jpய மீட்சி என்பது கர்ப்ப காலத்தைப் போலவே அதே அளவிலான கவனத்திற்குரிய ஒரு முக்கியமான கட்டமாகும். தாய்மார்கள் மீட்சியடையவும், தன்னம்பிக்கையை மீண்டும் பெறவும், சிறந்த முறையில் தாய்மைப் பயணத்தை ஆரம்பிக்கவும் தேவையான நேரம், தொழில்முறை வழிகாட்டல், அன்பான பராமரிப்பு ஆகியவற்றை வழங்குவதற்காகவே ParentX உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பிரசவத்திற்குப் பிந்தpய பராமரிப்புக்கான மாதிரிக் கட்டமைப்புகளை அடிப்படையாக கொண்டதாக இது இருக்கின்ற போதிலும், ParentX பிரிவின் ஒவ்வொரு அம்சமும் இலங்கை குடும்பங்களுக்கு ஏற்றவாறு கவனமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. என்றார். 

ஜோசப் பிரேசர் மருத்துவமனையின் பல்துறை மருத்துவக் குழுவால் உருவாக்கப்பட்ட ParentX, ஒரு முழுமையான மீட்சி அனுபவத்தை உருவாக்க, சான்றுகள் அடிப்படையிலான பிரசவத்திற்குப் பிந்திய பராமரிப்பை கலாசார ரீதியாக, பரீட்சயமான நடைமுறைகளுடன் ஒன்றிணைக்கிறது. இந்தத் திட்டத்தில் தனிப்பயனாக்கப்பட்ட தாய்ப்பாலூட்டல் ஆதரவு, பிறந்த குழந்தைக்கான பராமரிப்புக் கல்வி, பிசியோதெரபி, ஊட்டச்சத்து திட்டமிடல், உணர்வு ரீதியான சுகவாழ்வு ஆலோசனைகள், தியான/ மனநிறைவுப் பயிற்சிகள், ஆயுர்வேத சிகிச்சை முறைகளுடன், இந்த மீட்சிப் பயணத்தில் சிறந்த ஆதரவை வழங்குவதற்காக கணவன்மார்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்குமான வழிகாட்டல்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

பிரசவத்திற்குப் பிந்jpய சுகவாழ்வு உலகளாவிய ரீதியில் அதிக கவனத்தைப் பெற்று வரும் சூழலில் இந்த அறிமுகம் அமைந்துள்ளது. குழந்தை பிறந்து அடுத்து வரும் 12 வாரங்களுக்கான (fourth trimester) கட்டமைக்கப்பட்ட ஆதரவை வழங்குவது தாய்மார்களின் மீட்சியை மேம்படுத்துவதோடு, பெற்றோர் - குழந்தை இடையிலான பிணைப்பை வலுப்படுத்துதல், மன நிiறவை ஆதரித்தல், தாய் - சேய் இருவருக்கும் சிறந்த ஆரோக்கிய பெறுபேறுகளை அடைதல் ஆகியவற்றிற்கு பங்களிக்கிறது என்பதற்குப் பல்வேறு சான்றுகள் உள்ளன. 

பிறப்பு விகிதம் தொடர்ச்சியாக குறைவடைந்து வரும் இலங்கையில், தாய்மார்கள் குழந்தை பிறப்பிற்கு பின்னரான உடனடியான காலகட்டத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள உதவுவதன் மூலமும், பிரசவத்திற்குப் பிந்திய மீட்சியை ஒரு தெரிவாக அன்றி, தாய்மைப் பயணத்தின் அத்தியாவசிய அங்கமாக எடுத்துக் கொள்வதன் மூலம் தாய்மைப் பராமரிப்பில் ParentX ஆனது, காலத்திற்கு ஏற்ற ஒரு வரவாக விளங்குகிறது. மகப்பேற்றுக்கு அப்பாலும் பராமரிப்பை விரிவுபடுத்துவதன் மூலமும், இலங்கையின் தாய்மைப் பராமரிப்பில் உள்ள ஒரு முக்கியமான இடைவெளியை நிரப்புவதன் மூலமும் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஜோசப் பிரேசர் வைத்தியசாலையின் அர்ப்பணிப்பை ParentX பிரதிபலிக்கிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

Mobitel 1278