Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
Softlogic Automobiles நிறுவனத்தின் பிரத்தியேக பங்குடைமையின் மூலம் இந்தியாவின் Greaves Ampere மின்சார இருசக்கர வாகனங்கள் இலங்கையில் அறிமுகம் Softlogic

Aug 6, 2026 - 03:36 PM

Softlogic Automobiles நிறுவனத்தின் பிரத்தியேக பங்குடைமையின் மூலம் இந்தியாவின் Greaves Ampere மின்சார இருசக்கர வாகனங்கள் இலங்கையில் அறிமுகம்  Softlogic
Mobitel Inner 1278

Softlogic Holdings PLC நிறுவனத்தின் துணை நிறுவனமான Softlogic Automobiles (Pvt) Ltd, இந்தியாவின் முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றான Greaves Ampere நிறுவனத்தின் இலங்கைக்கான அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராக நியமிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அந்த நிறுவனம் இலங்கை சந்தையில் அதிகாரப்பூர்வமாக தனது செயல்பாடுகளை ஆரம்பிக்கிறது. இந்த பங்குடைமையின் மூலம், Ampere நிறுவனத்தின் Nexus, Magnus Neo, Magnus Gmax மற்றும் Reo Vyb ஆகிய மின்சார இருசக்கர வாகன மாடல்கள், Softlogic Group நிறுவனத்தின் தயாரிப்பு வரிசையில் இணைக்கப்படுகின்றன. இந்த புதிய வர்த்தக நாமமான Autovision ஆனது Colombo Motorshow 2026 கண்காட்சியில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் விற்பனை ஆகஸ்ட் மாதத்திற்குள் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்ப கட்டமாக, வத்தளை பகுதியில் அமைந்துள்ள Softlogic Max காட்சியகத்தில் விற்பனை தொடங்கப்படவுள்ளதுடன், இந்த ஆண்டின் இறுதிக்குள் விற்பனையாளர் வலையமைப்பு நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளது. 

Greaves Electric Mobility நிறுவனத்தின் கீழ் செயல்படும் Greaves Ampere, சர்வதேச சந்தைகளில் தொடர்ந்து தனது தடத்தை விரிவுபடுத்தி வரும் நிறுவனமாகும். இந்தியாவின் போக்குவரத்து துறையில் பல தசாப்தங்களாக உருவாக்கப்பட்ட பொறியியல் நிபுணத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட மின்சார இருசக்கர வாகனங்களின் பரந்த தயாரிப்பு வரிசையைக் கொண்டுள்ளது. இலங்கையின் மின்சார வாகன சந்தையில் தனது இருப்பை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், Greaves Ampere நிறுவனத்தின் நற்பெயரும் அதன் பல்வகை வாகன மாடல்களும் இயல்பான தெரிவாக அமைந்ததாக Softlogic Automobiles தெரிவித்துள்ளது. 

Softlogic Automobiles துறையின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஹேமந்த குணவர்தன இதுகுறித்து தெரிவிக்கையில், Softlogic Automobiles நிறுவனமாகிய நாங்கள், உலகத் தரத்திலான போக்குவரத்து தீர்வுகளை இலங்கைக்கு அறிமுகப்படுத்துவதில் உறுதியாக இருக்கிறோம். நாட்டை மேலும் முன்னேற்றமானதும் நிலை பேறு கொண்டதுமான போக்குவரத்து முறைக்கு மாற்றும் எமது தொலைநோக்கு நோக்கத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவின் முன்னணி மின்சார இருசக்கர வாகன வர்த்தக நாமங்களில் ஒன்றான Greaves Ampere-ஐ அறிமுகப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்த பிரத்தியேக பங்குடைமையின் மூலம், Softlogic குழுமத்தின் வலிமையுடனும் நம்பகமான விற்பனைக்குப் பிந்தைய சேவைகளின் ஆதரவுடனும், இலங்கை வாடிக்கையாளர்களுக்கு புத்தாக்கமான மின்சார போக்குவரத்து தீர்வுகளை வழங்குவதே எமது நோக்கமாகும். இது இலங்கையின் மோட்டார் வாகனத் துறையில் புதியதும் உற்சாகமூட்டுவதுமான ஒரு அத்தியாயத்தின் தொடக்கமாக அமையும் என்று நாம் நம்புகிறோம், என்றார். 

Greaves Ampere வர்த்தக நாமத்தினை பரந்த அளவிலான வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு அறிமுகப்படுத்தியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இளம் தொழில்நிபுணர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், நகர்ப்புற பயணிகள், குடும்பங்கள், முதன்முறையாக வாகனம் வாங்குவோர், வாகன இயக்குநர்கள் மற்றும் விநியோகச் சேவையில் ஈடுபடும் ஓட்டுநர்கள் ஆகியோர் இதன் முக்கிய வாடிக்கையாளர் பிரிவுகளாகக் கருதப்படுகின்றனர். அதேவேளை, எரிபொருள் சார்ந்த போக்குவரத்திலிருந்து விலகி, சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று வழிகளைத் தெரிவு செய்ய விரும்பும் நுகர்வோரும் முக்கிய வாடிக்கையாளர் பிரிவாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் மற்றும் தூய்மையான போக்குவரத்திற்கான அரசாங்க ஊக்குவிப்புகள் காரணமாக, இலங்கையில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கான சந்தை தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறது. 

இந்த பங்குடைமையின் நீண்டகால நோக்கம் தயாரிப்புகளை விற்பனை செய்வதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதல்ல என்று Softlogic Automobiles தெரிவித்துள்ளது. Greaves Ampere-ஐ இலங்கையின் முன்னணி மின்சார இருசக்கர வாகன வர்த்தக நாமமாக நிலைநிறுத்துவதும், நாடு முழுவதும் அதன் விற்பனையாளர் வலையமைப்பை விரிவுபடுத்துவதும், பாரம்பரிய போக்குவரத்துக்கு மாற்றாக மின்சாரப் போக்குவரத்து ஒரு நடைமுறைத் தீர்வாகும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே அதிகரிப்பதும் நிறுவனத்தின் பிரதான இலக்குகளாகும். மேலும், விற்பனைக்குப் பிந்தைய சேவைகள் மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்தை முதன்மையாகக் கொண்டு செயல்படுவதுடன், இலங்கையின் நீண்டகால நிலைபேறு இலக்குகளுக்கு ஆதரவளிக்கும் தனது பரந்த அர்ப்பணிப்பையும் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த விநியோக ஒப்பந்தம், Softlogic Automobiles நிறுவனத்தின் தற்போதைய தயாரிப்பு வரிசையை மேலும் வலுப்படுத்துவதுடன், நிலைபேறுடைய போக்குவரத்து தீர்வுகளை ஊக்குவிக்கும் Softlogic குழுமத்தின் விரிவான செயற்பாட்டு நோக்கத்தையும் பிரதிபலிக்கிறது. தெற்காசிய நாடுகளில் மின்சார இருசக்கர வாகனங்களின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவின் நம்பகமான முன்னணி வர்த்தக நாமமான Greaves Ampere, இலங்கையில் நன்கு அறியப்பட்ட உள்ளூர் விநியோகஸ்தரான Softlogic Automobiles- இன் ஆதரவுடன் சந்தையில் அறிமுகமாகுவது, குறிப்பாக நகர்ப்புறங்களில் மின்சார இருசக்கர வாகனங்களின் பயன்பாட்டை மேலும் துரிதப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Greaves Ampere வர்த்தக நாமத்தின் ஆகஸ்ட் மாத அதிகாரப்பூர்வ அறிமுகத்தை முன்னிட்டு, வாகனங்களின் விலை விவரங்கள், நிதி தெரிவுகள் மற்றும் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ள அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர் வலையமைப்பு தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

Mobitel 1278