Header Logo
செய்திகள்
வடக்கு தெங்கு முக்கோண திட்டத்தின் மற்றொரு கட்டம் ஆரம்பம்

Aug 9, 2026 - 02:55 PM

வடக்கு தெங்கு முக்கோண திட்டத்தின் மற்றொரு கட்டம் ஆரம்பம்
Mobitel inner

தெங்கு பயிர்ச்செய்கை சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் கற்பகத்தரு வளத்தின் கீழ் வடக்கு தெங்கு முக்கோணம் திட்டத்தின் மற்றொரு கட்டம் முல்லைத்தீவு, முள்ளியவளைப் பகுதியில் நடைபெற்றது. 

2030ஆம் ஆண்டளவில் இலங்கையின் தெங்கு ஏற்றுமதி வருமானத்தை 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், வருடாந்த தெங்கு உற்பத்தியை 4,200 மில்லியன் காய்களாகவும் உயர்த்தும் தேசிய இலக்கை அடையும் நோக்கில் இது நடத்தப்படுகிறது. 

இதன்போது தெங்கு காணிகளுக்கான நீர் விநியோக அமைப்புகளை அமைப்பதற்காக 443 தெங்கு பயிர்ச்செய்கையாளர்களுக்கு மானியக் காசோலைகள் வழங்கப்பட்டன. 

மேலும், விசேட தெங்கு காணி மறுசீரமைப்பு மானியத் திட்டத்தின் கீழ் மேலும் 72 பயிர்ச்செய்கையாளர்களுக்கு மானியக் காசோலைகள் வழங்கப்பட்டன. 

இதற்கு மேலதிகமாக, வட மாகாணத்தில் தெங்கு பயிர்ச்செய்கையை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் சுமார் 3,000 தென்னம்பிள்ளைகள் பயிர்ச்செய்கையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. 

"வடக்கு தெங்கு முக்கோணம்" தேசிய திட்டம் பருத்தித்துறை, சிலாபத்துறை மற்றும் கொக்கிலாய் பகுதிகளை இணைத்து யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 

கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்: வட மாகாணத்தில் தெங்கு பயிர்ச்செய்கையை விரிவுபடுத்துதல், பயன்படுத்தப்படாத காணிகளை மீண்டும் பயிர்ச்செய்கைக்கு உட்படுத்துதல், தெங்கு பயிர்ச்செய்கையாளர்களின் வருமான மட்டத்தை உயர்த்துதல் மற்றும் தேசிய ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு தெங்கு தொழில்துறையின் பங்களிப்பை அதிகரிப்பதாகும். 

'கற்பகத்தரு வளம்' மாற்றத்திற்கான திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் "வடக்கு தெங்கு முக்கோணம்" மூலம் இலங்கையின் வட மாகாணத்தை புதிய தெங்கு உற்பத்தி மண்டலமாக மாற்றுதல், தெங்கு பயிர்ச்செய்கையாளர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துதல், தெங்கு சார்ந்த தொழில்களுக்கான தொடர்ச்சியான மூலப்பொருள் விநியோகத்தை உறுதி செய்தல் மற்றும் தேசிய ஏற்றுமதி வருவாயை உயர்த்துதல் என்பன எதிர்பார்க்கப்படுகின்றன.


MOST READ

காணொளி
செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

செம்மறி என்று கூறுவது பிழை!

செம்மறி என்று கூறுவது பிழை!

Mobitel Upahara