Header Logo
வணிகம்
இலங்கையின் டிஜிட்டல் இடைவெளியைக் குறைக்கும் ஹட்சின் தொடர்ச்சியான முயற்சி: மேலும் பல கிராமப்புற சமூகங்களுக்கு சேவை விஸ்தரிப்பு

Aug 11, 2026 - 03:06 PM

இலங்கையின் டிஜிட்டல் இடைவெளியைக் குறைக்கும் ஹட்சின் தொடர்ச்சியான முயற்சி: மேலும் பல கிராமப்புற சமூகங்களுக்கு சேவை விஸ்தரிப்பு
Mobitel inner

இந்தக் கதை, நம்பகமான தொலைத்தொடர்பு இணைப்புக்காக பல ஆண்டுகளாகக் காத்திருந்த சமூகங்களைப் பற்றியதாகும். மாணவர்களைப் பொறுத்தவரை, இனி இணையத்தில் தங்களது ஆய்வுகளை மேற்கொள்வதற்காக வெகுதூரம் பயணம் செய்ய வேண்டியதில்லை என்பதே இதன் அர்த்தமாகும். அதாவது விவசாயிகளைப் பொறுத்தவரை, தமது விளைபொருட்களை நியாயமான விலையில் விற்பனை செய்வதற்குத் தேவையான நேரத்தில் சந்தை விலைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் . நகரத்தில் கல்வி பயிலும் தங்களது பிள்ளைகளுக்கு பணம் அனுப்புவதற்காக நீண்ட தூரம் பயணம் செய்யும் பெற்றோர்களுக்கும், இதற்கு முன்பு இணையவழிச் சந்தைகளை அணுக முடியாமல் இருந்த சிறிய வர்த்தக உரிமையாளர்களுக்கும், இறுதியாக ஒரு புதிய வாயில்திறக்கப்பட்டுள்ளது என்பதே இதன் பொருளாகும். 

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுக்காற்று ஆணைக்குழுவின் (TRCSL) பங்குடைமையுடன் ஹட்ச், [HUTCH] நிறுவனம் புதிதாகச் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட தளங்கள் மூலம் தொலைத்தொடர்பு இணைப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம், அதன் கமட்ட சன்னிவெடனய திட்டத்தின் சேவைப் பரப்பை, கிராமப்புற பகுதிகளில் இதுவரை தொலைத்தொடர்பு சேவை கிடைக்காத சமூகங்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளது. 

இந்தப் புதிய தொடக்கங்களின் மூலம், கண்டி மாவட்டத்தில் வெரெல்லகம, பெலவ, முருத்தலாவ, ஹல்லொலுவ மற்றும் மேலும் பத்து புதிய பகுதிகளுக்கு முதன்முறையாக தொலைத்தொடர்பு இணைப்பு கிடைத்துள்ளது. அனுராதபுரத்தில் குமாரெலிய, ஜயகம, பஹலகம, தலாவ மற்றும் மேலும் இரண்டு புதிய பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக, பதுளை, களுத்துறை, கேகாலை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மேலும் பதினான்கு புதிய பகுதிகளுக்கும் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 

ஹட்ச் மற்றும் TRCSL இடையிலான பங்குடைமையின் இந்தக் கட்டத்தின் மூலம், இலங்கையில் சுமார் 300 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு புதிய அகலப்பட்டை பரப்பெல்லை சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்துள்ளனர். ஒவ்வொரு புதிய தொலைத்தொடர்பு கோபுரமும், மக்கள் எங்கு வாழ்ந்தாலும், சமமான வாய்ப்புகளைப் பெறுவதற்கு அவர்களை மேலும் ஒரு படி நெருக்கமாகக் கொண்டு செல்கிறது. 

ஹட்ச் ஸ்ரீலங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. சௌமித்ர குப்தா தெரிவிக்கையில் , “தொலைதூரப் பகுதியில் ஒரு தொலைத்தொடர்பு கோபுரத்தை அமைப்பது ஒருபோதும் எளிதான காரியமல்ல. நிலப்பரப்பு, தளவாட வசதிகள், அணுகல் மற்றும் மின்சார விநியோகம் என ஒவ்வொன்றும் தனித்தனியான சவால்களை ஏற்படுத்துகின்றன. ஆனால், அவற்றில் எதுவும் எங்களது உறுதிப்பாட்டை மாற்றவில்லை. டிஜிட்டல் இடைவெளியைக் குறைப்பது என்பது அவ்வப்போது மட்டும் நாம் மேற்கொள்ளும் ஒரு பணியல்ல; அது தொடர்ந்து நிறைவேற்ற வேண்டிய பொறுப்பாகும். இந்த முயற்சிக்கு தலைமை தாங்கும் வகையில் எமது முதலீட்டையும் அதிகரித்துள்ளோம்” என்றார். 

அடையாளம் காணப்பட்ட மேலும் பல சேவை கிடைக்காத சமூகங்கள் அமைந்துள்ள மாவட்டங்களில், மேலதிக தொலைத்தொடர்பு கோபுர உள்கட்டமைப்புகளை அமைக்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக ஹட்ச் தெரிவித்துள்ளது. இவை இந்த ஆண்டின் எஞ்சிய காலப்பகுதியில் படிப்படியாக செயல்பாட்டுக்கு வரவுள்ளன. கமட்ட சன்னிவெடனய திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதில் ஹட்ச் தொடர்ந்து உறுதியாக உள்ளது. இதன் மூலம் அனைவருக்கும் தொலைத்தொடர்பு இணைப்பு கிடைப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த முயற்சி, 2030ஆம் ஆண்டுக்குள் 15 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்கும் இலங்கையின் இலக்கை முன்னெடுத்துச் செல்லும்.


MOST READ

காணொளி
மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

Mobitel Upahara