Header Logo
SLIC
Rhythams of Lanka
சினிமா
ஷகீலாவுக்கு கழுத்தில் அறுவை சிகிச்சை!

Aug 13, 2026 - 09:53 AM

ஷகீலாவுக்கு கழுத்தில் அறுவை சிகிச்சை!
Mobitel inner

நடிகை ஷகீலா உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் கழுத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதற்கு அதிகளவில் தொலைபேசியை பயன்படுத்தியதே காரணம் எனக் தெரிவிக்கப்படுகிறது. 

 

வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பிய பிறகு, தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோவில் தனது நிலைமை மற்றும் அனுபவங்களை அவரே விரிவாகப் பகிர்ந்து கொண்டுள்ளார். 

அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவர் கழுத்துப்பட்டை (neck collar) அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார். வீட்டில் இருந்தபடியே அவர் வெளியிட்ட அந்த வீடியோவில் கழுத்துப்பட்டை அணிந்திருந்துள்ளார். மேலும், அவர் வைத்தியசாலையிலிருந்து சிகிச்சை பெற்ற சில காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன. 

கட்டிலில் ஒருபுறமாகச் சாய்ந்து படுத்துக் கொண்டு நீண்ட நேரம் தொலைபேசியில் கேம் விளையாடியதால், அவரது கழுத்தில் உள்ள முக்கிய நரம்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அவர் 3 லட்சம் ரூபா செலவில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டியதாயிற்று. தொலைபேசியை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட அவர், குழந்தைகளுக்கு தொலைபேசியை கொடுக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார். 

தான் வெளியிட்ட வீடியோவில் தன்னைத்தானே சுய கிண்டல் செய்து பேசிய ஷகீலா, படுக்கையிலிருந்து எழுந்திருப்பது, சாப்பிடுவது போன்ற அடிப்படை விஷயங்களுக்குக் கூட தற்போது பராமரிப்பாளர்களின் உதவி தேவைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். "நான் சமீபத்தில் ஒரு பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். உங்களிடம் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். தொலைபேசி மிகவும் பயனுள்ள ஒரு பொருள், ஆனால் அதை தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தாதீர்கள்" என்று அவர் கூறியுள்ளார். 

தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கான காரணத்தை கூறும் ஷகீலா, "நான் கட்டிலில் ஒருபுறமாகச் சாய்ந்து படுத்துக் கொண்டு தொடர்ந்து நான்கு மணி நேரம் வரை தொலைபேசியில் கேம் விளையாடுவேன். டீ அல்லது காபி குடிப்பதற்காக மட்டுமே எழுந்திருப்பேன். டீ குடித்த பிறகு மீண்டும் வந்து அதே கேமைத் தொடர்வேன். 

அதன்பிறகு யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பல மணிநேரம் ரீல்ஸ் பார்ப்பேன். தவறான உடல் நிலைப்பாடு மற்றும் அதிகப்படியான தொலைபேசி பயன்பாடு காரணமாக எனது கழுத்தில் உள்ள முக்கிய நரம்புகள் பாதிக்கப்பட்டு, இறுதியில் அறுவை சிகிச்சை வரை கொண்டு சென்றுவிட்டது" என தெரிவித்தார்.


MOST READ

காணொளி
செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

தீர்த்தோற்சவம்!

தீர்த்தோற்சவம்!

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

தேர்த்திருவிழா!

தேர்த்திருவிழா!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

Mobitel Upahara