Header Logo
SLIC
Rhythams of Lanka
சினிமா
'தர்மன்' படப்பிடிப்பில் ரஜினிகாந்த்

Aug 13, 2026 - 11:26 AM

'தர்மன்' படப்பிடிப்பில் ரஜினிகாந்த்
Mobitel inner

‘தர்மன்’ படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கிவிட்டதை உறுதிசெய்து படக்குழுவினர் இன்று (13) ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'தர்மன்' திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை 'ஓ மை கடவுளே' மற்றும் 'டிராகன்' படங்களின் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். 

இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளதை படக்குழுவினர் புதிய வீடியோ பதிவு மூலம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர். அந்த வீடியோவில், இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து 'ஆக்ஷன்' எனக்கூற, ரஜினிகாந்த் தனது வழக்கமான ஸ்டைலுடனும் கம்பீரத்துடனும் நடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தற்போது நடைபெற்று வரும் இந்த ஷெட்யூலில் ரஜினிகாந்த் பங்கேற்கும் ஒரு பிரம்மாண்டமான பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு வைத்தியர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கிவிட்டதை உறுதிசெய்து படக்குழுவினர் இன்று ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது. வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுவதையும் அதனை இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து ‘ஆக்ஷன்’ என்று சொல்வதையும் காண முடிகிறது. நடிகர் ரஜினிகாந்த் தனது தனித்துவமான கம்பீரத்தையும் ஸ்டைலையும் வெளிப்படுத்தி உள்ளார். மேலும் சென்னையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. 

‘தர்மன்’ படத்தில் சிம்ரன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர், ' பேட்ட ' படத்திற்குப் பிறகு ரஜினிகாந்துடனும், 'பஞ்சதந்திரம்' மற்றும் 'பம்மல் கே சம்பந்தம்' படங்களுக்குப் பிறகு கமல்ஹாசனுடனும் மீண்டும் இணைந்துள்ளார். ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மிஸ்கின் மற்றும் ருக்மிணி வசந்த் ஆகியோர் இப்படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் அதனை இதுவரை படக்குழு உறுதி செய்யவில்லை. படத்தின் கதை விவரங்கள் தற்போதைக்கு ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. 

‘தர்மன்’ படத்தின் இசையமைப்பாளராக அனிருத், ஒளிப்பதிவாளராக நிகேத் பொம்மி மற்றும் படத்தொகுப்பைக் கையாளும் பிரதீப் இ ராகவ் ஆகியோரைக் கொண்டுள்ளார். புகழ்பெற்ற சண்டைக் கலை இயக்குநர்களான அன்பரிவ் சகோதரர்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளனர். 

கடந்த ஆண்டு நவம்பரில் சுந்தர் சி இப்படத்தின் இயக்குனராக முதலில் அறிவிக்கப்பட்டார், ஆனால் அவர் திடீரென இப்படத்தில் இருந்து விலகினார். பின்னர் , 'ஓ மை கடவுளே' மற்றும் 'டிராகன்' திரைப்பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவின் பெயர் சமூக வலைதளங்களில் வெளிப்பட்டு, தயாரிப்பாளர்களால் உறுதி செய்யப்பட்டது.


MOST READ

காணொளி
செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

தீர்த்தோற்சவம்!

தீர்த்தோற்சவம்!

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

தேர்த்திருவிழா!

தேர்த்திருவிழா!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

Mobitel Upahara