Header Logo
SLIC
Rhythams of Lanka
சினிமா
‘அந்நியன்’ போன்ற காதலரால் நர்சிசிஸ்டிக் கொடுமைக்கு ஆளானேன்!

Aug 13, 2026 - 11:47 AM

‘அந்நியன்’ போன்ற காதலரால் நர்சிசிஸ்டிக் கொடுமைக்கு ஆளானேன்!
Mobitel inner

திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுபமா பரமேஸ்வரன், தனது சமீபத்திய பேட்டியில் தனக்கு ஏற்பட்ட காதல் தோல்வி குறித்தும், கடந்த 2 ஆண்டுகளாக தான் சந்தித்த கொடுமையான நர்சிசிஸ்டிக் மன அழுத்த அனுபவங்கள் குறித்தும் வெளிப்படையாகப் பேசியுள்ளார். 

தான் அனுபவித்த உடல் ரீதியான மற்றும் மன ரீதியான துயரங்களை விவரித்த அனுபமா, கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தான் சந்தித்த மன உளைச்சலே தனது கடந்தகால சமூக வலைத்தளப் பதிவுகளுக்குக் காரணம் என்று கூறினார். தன்னைச் சுற்றியுள்ள குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரிபவர்கள் என அனைவரும் தனது மாற்றத்தை உணர்ந்ததாகவும், அந்த உறவிலிருந்து விலகுவதே தனக்கு நல்லது என்பதை அனைவரும் சுட்டிக்காட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அவர் தனது முன்னாள் காதலரின் நடவடிக்கைகளை நடிகர் விக்ரம் நடித்த ‘அந்நியன்’ திரைப்படக் கதாபாத்திரங்களுடன் ஒப்பிட்டுப் பேசினார். ஒரு நாள் அவர் 'ரெமோ' போல மிகவும் அன்பாகவும், மறுநாள் இரக்கமற்ற 'அந்நியன்' போலக் கொடூரமாகவும் நடந்துகொள்வார் என்றும், அதன் பிறகு தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்பார் என்றும் அனுபமா கூறினார். இந்தத் தொடர்ச்சியான மனமாற்றம் தமக்கு மிகப்பெரிய குழப்பத்தையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியதாகச் சுட்டிக்காட்டினார். 

இந்த நர்சிசிஸ்டிக் மனநிலையுடைய உறவினால் தனது திரைப்பட வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டதாக அவர் ஆதங்கப்பட்டார். தனது வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் அவர் கட்டுப்படுத்தத் தொடங்கியதால், பல நல்ல பட வாய்ப்புகளைத் தவறவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், தனது திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற 'டிராகன்' திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கூடத் தன்னால் கலந்துகொள்ள முடியாமல் போனதற்கு இந்த உறவின் கட்டுப்பாடுகளே காரணம் என்று அனுபமா விளக்கியுள்ளார். 

மூன்று மாதங்களுக்குள்ளேயே திருமணப் பேச்சுகளைத் தொடங்கி அவசரப்படுத்தியதாகவும், ஆனால் நிலைமையை உணர்ந்து தான் திருமணத்தை நிராகரித்ததாகவும் அனுபமா கூறினார். இதன் மூலம் தான் ஒரு 'கோல்ட் டிக்கர்' அல்ல என்பதை நிரூபித்துள்ளதாகவும், சரியான நேரத்தில் எடுத்த இந்த முடிவே தன்னை ஒரு மோசமான திருமண வாழ்க்கையிலிருந்து காப்பாற்றியுள்ளது என்றும் அவர் அந்த பேட்டியில் உறுதிபடக் கூறியுள்ளார்.


MOST READ

காணொளி
செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

தீர்த்தோற்சவம்!

தீர்த்தோற்சவம்!

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

தேர்த்திருவிழா!

தேர்த்திருவிழா!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

Mobitel Upahara