Header Logo
SLIC
Rhythams of Lanka
விளையாட்டு
தந்தை மறைந்த 4 நாட்களில் ஆடுகளத்திற்கு திரும்பிய மெஸ்ஸி!

Aug 13, 2026 - 12:25 PM

தந்தை மறைந்த 4 நாட்களில் ஆடுகளத்திற்கு திரும்பிய மெஸ்ஸி!
Mobitel inner

அர்ஜென்டினாவில் ஆஸ்தான வீரர், உலக கால்பந்து கடவுள் என போற்றப்படும் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி கடந்த ஆகஸ்ட் 8 ஆம் திகதி தனது 68 ஆவது வயதில் காலமானார். 

இந்நிலையில் தந்தை இறந்த 4 நாட்களுக்கு பிறகு லியோனல் மெஸ்ஸி மீண்டும் கால்பந்து களத்திற்கு வந்தது ரசிகர்களை பரவசப்படுத்தியுள்ளது. 

முன்னதாக தந்தை இறப்பின் பின், கால்பந்து விளையாட்டில் தொடர்வேனா என உறுதியாக தெரியவில்லை என்று மெஸ்ஸி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருந்த நிலையில் இந்த மீள்வருகை நிகழ்ந்துள்ளது. 

ஆகஸ்ட் 8 ஆம் திகதி காலமான ஜோர்ஜ் மெஸ்ஸியின் நீண்ட கால உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டது. 

ஆனால் அதுகுறித்து மேலதிக தகவல் கூறப்படவில்லை. நடந்து முடிந்த பிபா உலகக் கிண்ணத்தில் மெஸ்ஸி தலைமையில் அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டி வரை சென்று கோப்பையை ஸ்பெயினிடம் நழுவவிட்டது. 

கால்பந்தில் மெஸ்ஸி, தி கோட் ஆக வளம் வர, அவரின் தந்தையின் பக்கபலமும் முக்கிய காரணம். 

லீக்ஸ் கிண்ண தொடரில் இன்டர் மியாமி சார்பில் விளையாடும் மெஸ்ஸி, தந்தை மறைவை அடுத்து அதிலிருந்து வெளியேறினார். 

தந்தையின் இறுதிச்சடங்குகளுக்காக அர்ஜென்டினாவில் உள்ள தனது சொந்த ஊரான ரோசரியோவிற்கு சென்றிருந்தார். 

அதைத்தொடர்ந்தே அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் தந்தையின் இறப்பு குறித்த இரங்கல் உரையில், கால்பந்தில் தான் தொடர்வது குறித்து உறுதியாக தெரியவில்லை என உருக்கமாக பதிவிட்டிருந்தார். 

அதில், "நீங்கள் இல்லாமல் நான் என்ன செய்யப்போகிறேன் என தெரியவில்லை. இங்கிருந்து எப்படி தொடர்பது என்று தெரியவில்லை. நான் வாழ்வு முழுக்க கால்பந்து மட்டுமே விளையாடியிருக்கிறேன். ஆனால் அதை இன்னும் எவ்வளவு தூரம் தொடருவேன் என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது" என எழுதியுள்ளார். 

மேலும் தனது தந்தை தன்னை பயிற்சி ஆட்டங்களுக்கு அழைத்துச் செல்வதை நினைவுகூர்ந்த அவர், "நீங்கள் எனது தந்தையும், நண்பனும், பிரதிநிதியும் ஆவீர்கள்" என குறிப்பிட்டுள்ளார். 

மெஸ்ஸி கால்பந்தில் இருந்து நீண்ட இடைவெளி எடுத்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று (12) லீக்ஸ் தொடரில் லியோன் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் இன்டர் மியாமி சார்பில் மீண்டும் மெஸ்ஸி களமிறங்கினார். 

லீக்ஸ் கிண்ணத்தில் மாண்டரி அணிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் இன்டர் மியாமி 2 - 1 என தோல்வியை தழுவி தடுமாறிய நிலையில் நேற்றைய போட்டியில் லியோன் அணியை தோற்கடிக்க வேண்டிய கட்டாயம் இன்டர் மியாமிக்கு இருந்த நிலையில் மெஸ்ஸியின் வருகை நிகழ்ந்துள்ளது. 

நேற்றைய ஆட்டத்தின் 2 ஆம் பாதியில் மெஸ்ஸி இன்டர் மியாமி சார்பில் களமிறங்கினார். இருந்தும், லியோன் அணி 3 - 2 என்ற கணக்கில் இன்டர் மியாமியை வீழ்த்தியது. 

வெற்றி தோல்விகளை தாண்டி, மெஸ்ஸியின் மீள்வருகை ரசிகர்களுக்கு புது தெம்பூட்டியுள்ளது.


MOST READ
03
உலகின் முதன்முதல் முழுமையான, தானியங்கி (Fully Automated ) முறையில் தேங்காயிலிருந்து இளநீரை பெறும் இயந்திரத்தை நவீன தொழில்நுட்பத்துடன் ISF அறிமுகப்படுத

உலகின் முதன்முதல் முழுமையான, தானியங்கி (Fully Automated ) முறையில் தேங்காயிலிருந்து இளநீரை பெறும் இயந்திரத்தை நவீன தொழில்நுட்பத்துடன் ISF அறிமுகப்படுத

Aug 13, 2026 - 02:16 PM


காணொளி
செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

தீர்த்தோற்சவம்!

தீர்த்தோற்சவம்!

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

தேர்த்திருவிழா!

தேர்த்திருவிழா!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

Mobitel Upahara