Header Logo
SLIC
Rhythams of Lanka
வணிகம்
செலான் வங்கி, கல்கமுவ மகா வித்தியாலயத்தில் தரமான கற்றல் வளங்களை வழங்கி, 294ஆவது ‘பஹசர’ நூலகத்தை திறந்து வைக்கிறது

Aug 13, 2026 - 01:55 PM

செலான் வங்கி, கல்கமுவ மகா வித்தியாலயத்தில் தரமான கற்றல் வளங்களை வழங்கி, 294ஆவது ‘பஹசர’ நூலகத்தை திறந்து வைக்கிறது
Mobitel inner

கல்வியின் மூலம் வருங்கால சந்ததியினரை ஊக்கம் அளிப்பதில் தனது நீண்டகால அர்ப்பணிப்பைத் தொடரும் செலான் வங்கி, சமீபத்தில் நாரம்மல, மகாரச்சிமுல்லவில் உள்ள கல்கமுவ மகா வித்தியாலயத்தில் தனது 294ஆவது பஹசர நூலகத்தைத் திறந்து, வங்கியின் முதன்மையான சமூக நிலைத்தன்மை முன்னெடுப்பில் மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளது. 

இந் நூலகம், கிரியுல்ல பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் N. D. R. ஜயசூரிய, செலான் வங்கியின் வடமேற்கு பிராந்தியம் - பிராந்திய முகாமையாளர் உபேந்திர அதிகாரி; கல்கமுவ மகா வித்தியாலய அதிபர் H. P. A. S.ஜயதிலக மற்றும் செலான் வங்கியின் நாரம்மல கிளையின் கிளை முகாமையாளர் T. D.விஜேரத்ன, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பிற சிறப்பு விருந்தினர்களின் முன்னிலையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. 

செலான் வங்கியில், நமது நாட்டின் எதிர்காலத்திற்காக நாம் செய்யக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த முதலீடுகளில் ஒன்றாக கல்வியை நாங்கள் நம்புகிறோம். பஹசர முயற்சியின் மூலம் இளம் தலைமுறையினரை ஊக்குவிக்கும் கற்றல் சூழலை உருவாக்குவதற்கும், வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும், மாணவர்கள் வெற்றிபெறத் தேவையான அறிவு மற்றும் வளங்களை வலுப்படுத்துவதற்கும் நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். என செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனையின் உதவிப் பொது முகாமையாளர் ஆசிரி அபயரத்ன கூறினார். 

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பாடசாலையின் நூலக வசதிகளை செழுமைப்படுத்தவும் மாணவர்களுக்கு தரமான கல்வி வளங்களிற்கு அதிக அணுகலை வழங்கவும் செலான் வங்கி இரண்டு மடிக்கணினிகள், வெள்ளைத் திரையுடன் கூடிய பல்வகை ஊடக வீழ்த்தி மற்றும் ரூ.100,000 மதிப்புள்ள புத்தகங்களை நன்கொடையாக வழங்கியது. மேலும் ஆரம்ப நிகழ்வானது, பஹசர வாரத்தின் ஒரு பகுதியாக அமைந்திருந்ததது. இதில் எல்லே போட்டியும், தரம் 9 மற்றும் அதற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான ஊடக தின நிகழ்ச்சி, நிதிக்கல்வியறிவு கல்வித் திட்டம் மற்றும் தரம் 9 இற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கான சித்திரப் போட்டி ஆகியனவும் இடம்பெற்றன. 

இலங்கை முழுவதும் 300 பஹசர நூலகங்களை நிறுவுவதற்கான செலான் வங்கியின் உறுதிப்பாட்டை நோக்கிய மற்றொரு குறிப்பிடத்தக்க படியாக 294ஆவது நூலகத்தின் திறப்பு விழா அமைந்துள்ளது. இத் திட்டத்தின் ஊடாக செலான் வங்கி நூலக உட்கட்டமைப்பை வலுப்படுத்தல், அத்தியாவசிய கற்றல் கருவிகளுக்கான அணுகலை விரிவுபடுத்தல், நிதிக்கல்வியறிவை வளர்த்தல் மற்றும் நாடு முழுவதும் உள்ள சமூகங்களுக்குள் நீடித்த நேர்மறையான தாக்கத்தை உருவாக்கவும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது.


MOST READ
04
உலகின் முதன்முதல் முழுமையான, தானியங்கி (Fully Automated ) முறையில் தேங்காயிலிருந்து இளநீரை பெறும் இயந்திரத்தை நவீன தொழில்நுட்பத்துடன் ISF அறிமுகப்படுத

உலகின் முதன்முதல் முழுமையான, தானியங்கி (Fully Automated ) முறையில் தேங்காயிலிருந்து இளநீரை பெறும் இயந்திரத்தை நவீன தொழில்நுட்பத்துடன் ISF அறிமுகப்படுத

Aug 13, 2026 - 02:16 PM


காணொளி
எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

தீர்த்தோற்சவம்!

தீர்த்தோற்சவம்!

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

தேர்த்திருவிழா!

தேர்த்திருவிழா!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

Mobitel Upahara