Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
வறட்சியான வானிலையால் 68,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

Aug 14, 2026 - 05:43 PM

வறட்சியான வானிலையால் 68,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
Mobitel inner

வறட்சியான வானிலை காரணமாக 68,041 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது. 

நான்கு மாவட்டங்களில் உள்ள 17 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகக் அதன் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரகீத் தனன்சூரிய குறிப்பிட்டுள்ளார். 

மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களே இந்த வறட்சியான வானிலையினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 

அதற்கமைய, 21,873 குடும்பங்களைச் சேர்ந்த 68,041 பேர் வறட்சியான வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மேலும், குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள 3,495 குடும்பங்களைச் சேர்ந்த 12,291 பேருக்குத் தேவையான குடிநீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரகீத் தனன்சூரிய குறிப்பிட்டுள்ளார். 

பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்காக உள்ளூராட்சி அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


MOST READ

காணொளி
செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

தீர்த்தோற்சவம்!

தீர்த்தோற்சவம்!

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

Mobitel Upahara