Aug 14, 2026 - 06:31 PM

செம்மணி மனித புதைகுழியின் 106 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று (14) முன்னெடுப்பட்டன.
இன்று முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 02 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 52 ஆவது நாளான இன்று 554 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 547 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மனித என்புக்கூட்டு தொகுதி ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.























