Header Logo
SLIC
Rhythams of Lanka
சினிமா
சாந்தனு - சீமான் இணையும் புதிய படம்

Aug 16, 2026 - 10:34 PM

சாந்தனு - சீமான் இணையும் புதிய படம்
Mobitel inner

பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில், நடிகர் சாந்தனு பாக்யராஜ் மற்றும் - அரசியல் பிரமுகர் சீமான் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

கண்ணன் ரவி குரூப்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்திற்கு ‘ஒரு கைதியின் டைரி’ எனப் பெயரிடப்பட்டு, அதன் அதிரடியான போஸ்டர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. 

தயாரிப்பு நிறுவனமான KRG குரூப்ஸ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது. 

"ஒரு மனிதன், ஒரு கதை, ஒரு சகாப்தம். இதுவே ஒரு கைதியின் டைரி!" என்ற அழுத்தமான வரிகளுடன் வெளியாகியுள்ள இந்த போஸ்டர், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு எகிற வைத்துள்ளது. 

'வெண்ணிலா கபடி குழு', 'நான் மகான் அல்ல' போன்ற யதார்த்தமான மற்றும் விறுவிறுப்பான கதைகளை இயக்கி தனக்கென ஒரு முத்திரை பதித்த இயக்குனர் சுசீந்திரன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். 

இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சாந்தனு பாக்யராஜும், மிக முக்கிய ஆளுமையான சீமானும் இணைந்து நடிக்கின்றனர். இவர்களின் கூட்டணி திரையில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற ஆர்வம் சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது.


MOST READ

காணொளி
ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

Mobitel Upahara