Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வௌியானது

Aug 18, 2026 - 09:05 AM

அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வௌியானது
Mobitel Inner 1278

அத்துருகிரிய - ஹபரகட, முல்லேகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு இரு போதைப்பொருள் கடத்தல் குழுக்களுக்கு இடையே நிலவும் மோதலே காரணம் எனப் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

வெளிநாடொன்றில் தலைமறைவாக உள்ள பாதாள உலகக் குழு உறுப்பினரான 'ஹபரகட கசூன்' என்பவரின் உறவினர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நேற்று (17) இரவு இடம்பெற்ற இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 29 வயதான வர்த்தகர் ஒருவர் காயமடைந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவரே இத்துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

சுமார் மூன்று தோட்டாக்கள் தீர்க்கப்படும் சத்தம் கேட்டதாகவும், துப்பாக்கிச் சூட்டை நடத்திய உடனேயே துப்பாக்கிதாரிகள் தப்பிச் சென்றுவிட்டதாகவும் சம்பவ இடத்திலிருந்த அயலவர்கள் 'அத தெரண' செய்திச் சேவைக்குத் தெரிவித்தனர். 

இச்சம்பவம் தொடர்பில் அத்துருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 


MOST READ

காணொளி
ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

பக்தியோடு திரண்ட பக்தர்கள்!

பக்தியோடு திரண்ட பக்தர்கள்!

மனோ அதிரடி!

மனோ அதிரடி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

Mobitel 1278