Aug 18, 2026 - 10:01 AM
By மட்டக்களப்பு நிருபர் சரவணன்
By மட்டக்களப்பு நிருபர் சரவணன்

மட்டக்களப்பு, பாசிக்குடா கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று (17) காலை உயிரிழந்த நிலையில் கரைஒதுங்கியுள்ளது. மீட்டெடுக்கப்பட்ட இச்சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும், இவர் பற்றிய தகவல்கள் தெரிந்தால் தெரிவிக்குமாறும் பாசிக்குடா பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், கரையொதுங்கியிருந்த சடலத்தைக் கண்டு பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாசிக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

































