Header Logo
SLIC
Rhythams of Lanka
சினிமா
என் வளர்ச்சிக்கு காரணம் நான் மட்டும்தான்!

Aug 19, 2026 - 01:49 PM

என் வளர்ச்சிக்கு காரணம் நான் மட்டும்தான்!
Mobitel Inner 1278
EDEX Inner

விஜய் தொலைக்காட்சியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தனது கலகலப்பான பேச்சால் ரசிகர்களிடையே பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. 

சின்னத்திரையில் கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து, வெள்ளித்திரையில் தடம் பதித்த இவர் மாரி 2, ஜெயிலர், கலகலப்பு 2, கோலமாவு கோகிலாஎன பல முன்னணித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில், அவர் அளித்த பேட்டி ஒன்றில், என் வளர்ச்சிக்குக் காரணம் நான் மட்டும்தான், என் கணவர் கிடையாது என பேசி இருக்கிறார். 

அதில், என்னை பார்க்கும் பலரும் நீ இந்த இடத்திற்கு வர்றதுக்கு உன் புருஷன்தான் காரணம்னு சொல்றாங்க. தயவுசெஞ்சி அப்படி சொல்லாதீங்க. நான் இந்த இடத்திற்கு வர்றதுக்கும், மேடைகள்ல ஏறுறதுக்கும் தெருத்தெருவா அசிங்கப்பட்டிருக்கேன். 

பாத்ரூம் வரைக்கும் அவமானப்பட்டிருக்கேன். ஒவ்வொரு மேடையிலும் அடிபட்டு, 100 ரூபாய், 200 ரூபாய் சம்பளத்துல ஆரம்பிச்சு, இன்னைக்கு இந்த அளவுக்கு வந்து நிற்குறேன்னா அதுக்கு என்னோட தன்னம்பிக்கை மட்டும்தான் காரணம். பல பேர்கிட்ட அசிங்கப்பட்டு, செருப்படிபட்டு இந்த இடத்திற்கு வந்ததற்கு முழுக்க முழுக்க நான் மட்டும்தான் காரணம். 

என் கணவர் ரியாஸ் கிடையாது. இதை நான் என் புருஷன்கிட்டயே ஓபனா சொல்லியிருக்கேன். ஒரு பெண் இன்னொருத்தரோட உதவியாலதான் வெற்றி பெற முடியும்னு தயவுசெஞ்சு சொல்லாதீங்க. அது கண்டிப்பா கிடையாது. 

ஒரு பெண் தனியா இருந்தாலும் ஜெயிக்க முடியும். ஆனா, அவ ஜெயிக்கிறப்போ அந்தப் பயணத்துல கூட இருந்தவங்களுக்கு நன்றியோடவும் விசுவாசத்தோடவும் இருப்பா. 

என் கணவர் எனக்குக் கொடுத்த பெரிய நம்பிக்கையே, நீ மேல வருவ... உன்னை நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். இந்த சமுதாயம் உன்னை ஆயிரம் கேள்வி கேட்கும், ஆனா அதுக்கு நான் தடையா இருக்க மாட்டேன்னு சொன்னதுதான். 

இன்னைக்கு வரைக்கும் என் மாமியார், மாமனார் மற்றும் என் கணவர் ரியாஸை நான் உயர்வா நினைப்பேன். என் புருஷன் ஒரு தடவைகூட என் போனை எடுத்து செக் பண்ணி பார்த்ததே கிடையாது. எனக்கு நடு இராத்திரியில போன் வந்தால்கூட, அதை எடுத்து என் கையில கொண்டு வந்து கொடுப்பாரே தவிர, அவரா ஆன் பண்ணி பேசியதே இல்லை. 

அதுதான் நம்பிக்கை. அந்த நம்பிக்கையைக் கொடுத்ததற்காக என் கணவர் ரியாஸுக்கு நன்றி சொல்லிக்கிறேன் என அறந்தாங்கி நிஷா அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.


MOST READ

காணொளி
இடமாற்றம் ஒரு தீர்வு கிடையாது!

இடமாற்றம் ஒரு தீர்வு கிடையாது!

தன்னிச்சையாகவே செயற்படுகின்றது!

தன்னிச்சையாகவே செயற்படுகின்றது!

போரதீவுப்பற்று ஏன் உள்ளடக்கப்படவில்லை?

போரதீவுப்பற்று ஏன் உள்ளடக்கப்படவில்லை?

573 என்புக் கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுப்பு!

573 என்புக் கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுப்பு!

இது விமர்சனம் அல்ல, ஒரு அக்கறை!

இது விமர்சனம் அல்ல, ஒரு அக்கறை!

சர்வதேச விசாரணை ஒன்று தான் தீர்வு!

சர்வதேச விசாரணை ஒன்று தான் தீர்வு!

தபால் ஊழியார்களுக்கு Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

தபால் ஊழியார்களுக்கு Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

Mobitel 1278